0

"நம்மீது வீசப்படும் பல கற்களை விட நம் மனதுக்கு பிடித்தவரின் பேசப்படும் சொற்களிடம் அமைதியாகவும் / நிதானமாகவும் இருப்போம்.. கற்கள் வெறும் உயிரை மட்டுமே நிரந்தரமாக கொள்ளும்.. சொற்கள் உயிரோடு கொள்ளும்.. என்றாவது ஒரு நாள் புரிதல் நடந்தே தீரும் அன்பு உண்மையானது என்றால்.."

-----------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு 


நான் : “வெரி சிம்பிள் பாலிசி.. த்ரிஷா கிடைக்கலைன்னா ஒரு திவ்யா”

திவ்யா :“வாட்?”, பிரகாசமான முகத்துடன்

பிரியா : “வாட்?”, கொஞ்சம் லேட்டாக

அவசரத்தில் வாயிலிருந்து விழுந்துவிட்ட வார்த்தைகளுக்காக நாக்கைக் கடித்துக் கொண்டேன். அடுத்த செகண்டே..

நான் : இல்ல.. த்ரிஷா இல்லைன்னா ஒரு திவ்யா இல்லனா நித்யா இல்லைனா வித்யா.. எதுவா இருந்த என்ன.. வடிவேலு ஜோக் மாதிரி ட்ரை பண்ணேன். பட், இடம், பொருள், கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சி” என சப்பைக்கட்டு கட்டினேன்.

திவ்யா சிரித்துக் கொண்டே அதிக ஆர்வம் காட்டாததுபோல் சாப்பிடுவதைத் தொடர்ந்தாள். பிரியா மட்டும் எரித்துவிடுவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென திவ்யாவிற்கு செல்ஃபோனில் கால் வந்தது. ஏதோ முக்கியமான கால் என நினைத்துக் கொண்டு வெளியே ஓடுவதற்கு அவசரமாக எழுந்தாள். பாதி தூரம் ஓடியவள் திரும்ப டேபிளுக்கு தண்ணீர் குடிக்க ஓடிவந்தாள். குடிப்பதற்குப் பாட்டிலை எடுக்கும்போது, என் காதருகில், “தேங்க்ஸ் பிரபு” என கிசுகிசுத்துவிட்டு திரும்ப வெளியே போய்விட்டாள். எனக்கு உள்ளுக்குள் படபடவென அடித்தது. பிரியா முகத்தை திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தது எனக்கு வசதியாய் இருந்தது. கவனித்தது போல் தெரியவில்லை. “இன்னும் இது மாதிரி எத்தனைத் தடவை செத்துச் செத்து பிழைக்கிறதோ, கடவுளே. சீக்கிரம் ஒரு மாசம் முடியட்டும் ஆடுவெட்டி பொங்கல் வைக்கிறேன்” என நொந்துகொண்டேன். 

சாப்பிட்டு முடிக்கும்வரை நானும், பிரியாவும் பேசிக் கொள்ளவில்லை. அவர் அவர் இடத்திற்குப் போய்விட்டோம். மாலை 6 மணிக்கு கிளம்பும்வரை இருவரும் அமைதியாக இருந்தோம். எனக்கு இருந்த மனநிலையில் இது நிம்மதியளித்தாலும், பிரியாவை மிஸ் பண்ணுவதுபோல் உணர்ந்தேன். ஆபிஸிலிருந்து கிளம்பும்போது நானே ஆரம்பித்தேன்.

நான் : “ஹேய் என்ன ஆச்சி?” 

பிரியா : “ம்ம் .. நத்திங்..”

நான் : “அப்படின்னா ஏதோ ஒண்ணு இருக்குன்னு அர்த்தம்?”

பிரியா : “ஓ.கே. த்ரிஷா இல்லைன்னா திவ்யாவா?” முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டே கேட்டாள்

நான் : “இன்னுமா அத யோசிச்சிட்டு இருக்க?”

பிரியா : “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

நான் : “சரி... நான் ச்சும்மா பொதுவா சொன்னேன். இரண்டு பேரும் பசங்களை கிண்டல்  பண்ணிக்கிட்டு இருந்தீங்க.. அதான் நானும் என் பங்குக்கு பொண்ணுகள கிண்டல் பண்ணேன். அவ்ளோதான்

பிரியா : “அதுல திவ்யா எங்க இருந்து வந்திச்சி?”

நான் : ”அப்படி தான வடிவேலு படத்துல சொல்வாரு.. நான் எதுவும் நினைகள.. ” கொஞ்சம் டென்ஷன் ஆக ஆரம்பித்தேன்.

பிரியா : “எனக்கு என்னமோ அப்படி தெரியல..” முகத்தை எங்கேயே வைத்துக் கொண்டு சொன்னாள்.

நான் : கோபம் உச்சி மண்டையில் ஏறியது, “நீ கூடத் தான் ஆண்கள் மேலேயே நம்பிக்கை இல்லைன்னு சொன்ன, அதுக்காக நீ என்னையுமா சொல்றன்னு கேட்டேன்னா? நான் புரிஞ்சிகிட்ட மாதிரி நீயும் புரிஞ்சிக்க வேண்டியது தான?”

பிரியா இந்த அளவு விவாதம் சண்டையாக மாறும் அளவுக்குப் போகும் என எதிர்பார்க்கவில்லை. அதை ஆரம்பிப்பததற்கும், நானும் முதன்முறையாக எரிச்சல்படும்படி செய்ததற்கும் ரொம்பவே வருத்தப்பட்டாள். நான் ஹோட்டல் வரும்வரை பேசவே இல்லை. அது பிரியாவை ரொம்ப கஷ்டப்படுத்தியது. ஆனால் என் மனதில் ஓடியது வேற “திவ்யா காதல் விஷயம் தெரியாமலேயே, அவளால பிரியா கூட இந்த அதிக அளவு சண்டை வருது. ஒரு வேளை தெரிஞ்சா?” இதே போல் ஏகப்பட்ட விஷயங்கள். ரொம்ப குழம்பிப் போய் இருந்தேன்.

இரவு 7 மணி இருக்கும். பிரியா என் ரூம்க்கு அவசரம் அவசரமாக ஓடி வந்தாள். அவளிடம் இருந்த கீயை வைத்துத் திறந்து உள்ளே வந்தாள். நான் உள்ளே இல்லை. “பிரபு பிரபு” என கத்தினாள். 

நான் : “பாத்ரூம்ல இருக்கேன். 5 மினிட்ஸ்”.

7 நிமிடம் கழித்து வெளியே வந்தேன் இடுப்பில் டவலுடன். சோப் வாசனையுடன் மார்பில் படர்ந்த முடிகளுடன், கழுத்தில் அவன் போட்டிருந்த கோல்டு செயின் சகிதம் பேர் பாடியுடன் வெளியே எக்ஸ்ட்ரா ஃப்ரெஷ்னஸ்ஸுடன் வந்தேன். முதல் முறை பிரியாவை சென்னை ரூமில் பார்த்த போது இருந்த சங்கோஜம் இப்போது இல்லை. பிரியா முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. 

பிரியா : கண்ணடித்துக் கொண்டே ஆரம்பித்தாள். என்னனு கண்டுபிடி பாப்போம்?

நான் :“வாட்?” எனி குட் நியூஸ்?”

பிரியா : “யெஸ்.. யூ ஆர் கரெக்ட்..வெரி குட் நியூஸ்”

நான் : “அப்படி என்ன?”

பிரியா : “திவ்யா அவசரமா பெய்ஜிங் போயிட்டா.. வர்றதுக்கு டூ வீக்ஸ் ஆகுமாம்.. ஹேய்ய்ய்ய்” குதித்தாள்.

“ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஹேய்ய்ய்ய்” என அவளை விட பல மடங்கு சத்தத்தில் சந்தோஷக் கூச்சல் போட்டேன். திடீரென அதை பிரீஸ் பண்ணி, “அவ போனதுக்கு நான் சந்தோஷப்படுறேன். ஓ.கே.. பிரியா ஏன் குதிக்கிறா?” என யோசித்து கலவரமானேன். அவளிடமே கேட்டேன்.

நான் : ”ஆமா அவ போனதுக்கு நீ ஏன் சந்தோஷப்படுற?”

பிரியா : ”ஆமா.. பொண்ணா அவ.. அன்னைக்கு லஞ்ச்ல நீ வெளில போனப்ப என்ன சொன்னா தெரியுமா?”

நான் : “என்ன சொன்னா?” கலவர ரேகைகள் அதிகமாகியது.

பிரியா : “பிரபு ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருக்கான்ல அப்படின்னு என்கிட்டயே கேட்குறா? எனக்கு கடுப்பாயிடுச்சி.. அப்ப இருந்து அவளைக் கண்டாலே பிடிக்கல”

அழுவதா சிரிப்பதா தெரியவில்லை எனக்கு.

நான் : “வேற என்ன சொன்னா?” இன்னும் பீதியுடன் கேட்டேன்.

பிரியா : “அவ்ளோதான்.. இதுல நீ வேற திவ்யா திவ்யான்னு ஜொள்ளு ஊத்திக்கிட்டு இருந்தியா.. பயமா இருந்திச்சி.. இப்ப ஓ.கே. அப்படியே அவ திரும்பி வந்தாலும், ஒரு வாரம் தான். சமாளிச்சிக்கலாம்”

”அப்படியே என் மனசுல இருக்குறத டையலாக் மாறாம சொல்றால்லே” என சந்தோஷப்பட்டேன். “சூப்பர்” என சொல்லிக் கொண்டு பிரியா முன்னால் தலையை சிலுப்பிக்கொள்ள  தண்ணீர்த்துளிகளை அவள் மேல் தெளித்தான்.

அவள், “டேய்” என கத்திக் கொண்டு கையால் தடுத்துக் கொண்டு என்னை அடிக்க வந்தாள். நான் இன்னும் வேகமாக அவள் முன் வந்து சிலுப்பிக் கொண்டிருக்க, பிரியா கையில் காற்றை படபடவென அடித்துக் கொண்டு தடுத்தாள். நான் அவள் கைகளை பற்றிக் கொண்டு முகத்தின் அருகே வந்து பண்ணினேன். அவள் திமிறிக் கொண்டு இருந்தாள். இருவரின் ஸ்பரிசமும் மிக…. மிக மிக அருகில். நான் திடீரென நிறுத்திக் கொள்ள, அவளும் திமிறிக் கொண்டிருந்ததை உடனே நிறுத்திக் கொள்ள இருவரின் கண்களும் நேர்கோட்டில் காதல் பாஷைகளை பரிமாறிக் கொண்டிருந்தன.

பிரியா : “நோ பிரபு.. ப்ளீஸ்ஸ்ஸ்” என கிசுகிசுக்க..

நான் : “யூ மீன், யெஸ்..”

”நோ..” என திறந்த இதழ்களை அவள் மூடவில்லை. முழுதாக இரண்டு நிமிடம் தாண்டிக் கொண்டிருந்தது. காது வழியே மூச்சு அனல் காற்றாக துடிதுடித்து வெளியே போய்க் கொண்டிருக்க, உச்சந்தலையின் மையப்புள்ளியில் ஏதோ ஒன்று திரண்டு இருந்தது. மூன்று நிமிடம் தாண்டி முத்தத்தை முடித்துக் கொள்ள, மூக்கு மீண்டும் நார்மலாக மூச்சு விட முயற்சி செய்து கொண்டிருந்தது. இருவரின் உதடுகளும் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. இன்னும் பிரியா என் பிடியில் இருந்தாள்.

பிரியா : “இன்னும் ஒரு குட் நியூஸ் இருக்கு” நடுநடுங்கும் உதடுகளைப் பிரித்து காற்றில் சொன்னாள்.

நான் : “வாட்?” ஆர்வமே இல்லாமல் அவள் கண்களை உற்று நோக்கிக் கொண்டே சொன்னேன்.

பிரியா : “மேரேஜ் டேட் ஃபிக்ஸ் ஆயிடுச்சி. அடுத்த மாசம் 25”

நான் : “இப்ப எதுக்கு இத சொல்ற.. யூ மீன்ன்ன்ன்ன்..?” என இழுத்துக் கொண்டே அவளை இன்னும் இறுக்கினேன்.

பிரியா : “மீனும் இல்ல.. சிக்கனும் இல்ல.. “என கத்திக் கொண்டே என்னைக் கட்டிலில் மொத்தமாகத் தள்ளிவிட்டு கதவைத் திறந்து ஒரே பாய்ச்சலில் அவள் ரூமிற்க்கு ஓடிவிட்டாள். 

"டிங்கு டைரி - 51 காதலும் புரிதலும்" அடுத்த பகுதி தொடரும்.........

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48]


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


"எவ்வளவு வீழ்ச்சியை சந்தித்தாலும் ஆருதலாக ஒரு உறவு இருந்தாலே வெற்றி காணலாம்😋"

கருத்துரையிடுக Disqus

 
Top