0

"அவள் உங்களுடன் தான் பேசிக்கொண்டிருப்பாள் நீங்களும் அவளுடன் தான் பேசிக்கொண்டிருப்பீர்கள் கேட்டுக் கொள்வதில் தான் பிரச்சனை!"

------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு 


நானும் பிரியாவிடம் இந்த மாதிரியான ரெஸ்பான்ஸை எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் கல்யாணத்திற்கு முன் ரொம்ப ஓவராக அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் முடிவு செய்துகொண்டேன். பிரியா அன்று நடந்த சம்பவத்திற்கு பின் என்னிடம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. என் ரூமிற்கும் வருவதில்லை. ரொம்ப நார்மலாக, “வாட் இஸ் வாட்?” என்ற அளவில் மட்டும் பழக ஆரம்பித்தாள். பிரியாவின் இந்த திடீர் மாற்றம் என்னை ரொம்ப கஷ்டப்படுத்தியது. ரெண்டு நாட்களுக்கு மேல் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

ஆஃபிஸ் விட்டு கிளம்பும்போது, நேராக அவளிடம் கேட்டுவிட்டேன். 

நான் : ”ஹேய், ஐயாம் ஸாரி”

பிரியா : “தட்ஸ் ஓ.கே” என்றாள் பட்டும்படாமல்.

நான் : ”நீ ஏன் இப்படி இருக்க? முன்ன மாதிரி ப்ரீயா பேச மாட்டேங்குற..கோவமா இருந்தா திட்டிடு. இப்படியெல்லாம் பண்ணாத”

பிரியா : “   ” அமைதியாக வந்தாள்.

நான் : “இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”

பிரியா : “வேண்டாம்.. கொஞ்ச நாள் நாம இப்படியே இருந்திடலாம். அதான் நாம இரண்டு பேருக்கும் நல்லது. இன்னும் 3 வாரம் தான?”

நான் : “அதான் ஏன்?”

பிரியா : “ஏன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை”

நான் : “ம்ம். ஸோ??”

பிரியா : “இதுக்கப்புறம் நான் எதையும் என்கரேஜ் பண்ண விரும்பலை”

நான் : “ம்ம்ம்”

பிரியா : “உன்ன கஷ்டப்படுத்த நான் இதைச் சொல்லலை?”

நான் : “ஹை,, எதுவும் பிரச்சனை இல்ல. இத கூட நான் புருஞ்சுக்க மாட்டேனா .” என் மனதில் கோபம் துளிகூட இல்லை, 

பிரியா : “தேங்க்ஸ். நீ ரொம்ப நல்லவன் தான் ” என்றாள் மீண்டும் பழக்கமான உற்சாகம் நிறைந்த குரலில்.

இப்படி நல்ல புரிதலுடன் இருவரின் வாழ்க்கையும் ஒன்றாகச் சென்று கொண்டிருந்த போது, அந்த அதிர்ச்சி மின்னஞ்சல் வந்தது.

அடுத்த பகுதி  : 


முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Related image

"நமக்கு 20வயசு நடக்கும்போது 30 வயசுகாரங்களுக்குத்தான் பெரும்பாலும் “கல்யாணம்” நடந்துச்சு, நமக்கு 30வயசு நடக்கும்போது, 20 வயசு பசங்களுக்கே பெரும்பாலும் “கல்யாணம்” நடக்குது "

கருத்துரையிடுக Disqus

 
Top