0

"உன்னழகை உனக்கு விளக்கிச் சொல்லவே படைக்கப்பட்டேன் நான்.. உன் இதயத் துடிப்பிற்கு பதில் சொல்லத் தான் என் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.. .."

------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு 


“உங்களின் வந்த வேலை முடிந்துவிட்டதால், நீங்கள் சீக்கிரம் கோலாலம்பூர் போக வேண்டி இருக்கும். அடுத்த வாரம் கூட இருக்கலாம்” என்பது தான் அந்த மின்னஞ்சல் செய்தி.

நான் : லைட்டாக ஷாக் ஆகி, “நம்ம பி.எம் இந்த இமெயில்ல என்ன சொல்ல வர்றாரு? டவுட்டா இருக்கே?”

பிரியா : ”ஓ.. அதுவா.. லாஸ்ட் வீக் ரெடி பண்ண ப்ரோப்பஸல்ல டேவிட் நேத்து சைன் பண்ணிட்டான். அதை சொல்றாரு” என்றாள் பிரியா, கண்ணடித்துக் கொண்டே.

நான் : “ஓ.. ஐ ஸீ.. ரொம்ப நல்லத போச்சி. ஷாப்பிங் ஆரம்பிச்சிடலாம். இங்க சம்பாதித்த ஒரு பைசாவைக் கூட நாம எடுத்திட்டு போகக் கூடாது. ஓ.கேவா?” என்றேன்.

பிரியா : “ஓ.கே டீல்” 

எனக்கு திவ்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகியாகிடலாம் என்ற சந்தோஷம் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் பறக்க வைத்தது. நாட்களை மிகக் கொடுமையாக ஆபிஸில் தள்ளிக் கொண்டிருந்தோம். இரண்டு நாள் ஆனபிறகும். மேனேஜரிடம் இருந்து கிளம்புவது சம்மந்தமாக எதுவும் வரவில்லை. மீண்டும் மின்னஞ்சல் அனுப்பினேன்.

பிரியா : “நீ ஏன் அவசரப்படுறே? க்ளையண்ட்க்கு இன்பார்ம் பண்ணனும். டிக்கெட் அரேஞ்ச் பண்ண வேணாமா? நாம வேற ஷாப்பிங் முடிக்கல?” அவசரம் புரியாமல் எகிறினாள்.

நான் : “இல்ல.. அவர் மறந்திருப்பார்ல.. ஜஸ்ட் ரிமைண்டர் மின்னஞ்சல் அனுப்புறதுல என்ன தப்பு?” எனச் சமாளித்தேன்.

பிரியா : “ஓ.கே. அதுவும் கரெக்ட் தான்” என லேப்டாப்பில் மூழ்கினாள்.

அந்த நாள் மேனேஜரிடம் இருந்து எதுவும் ரிப்ளை வரவில்லை. நானும் மறந்துவிட்டேன். ஈவ்னிங் ஷாப்பிங் போய் பேர்ல்ஸ், எல்லாருக்கும் வாட்ச், நிறைய ட்ரெஸ் எல்லாம் வாங்கினார்கள். இரவு வர லேட்டாகிவிட, சப்வேயில் ஸாண்ட்விச் முடித்துவிட்டு, பட்டர்ஸ்காட்ச் மில்க் ஷேக்குடன் ஹோட்டல் ரூம் வந்தோம்.

மறுநாள் காலையில், மேனேஜரிடம் இருந்து மின்னஞ்சல்.

“உங்களை ரிலீஸ் பண்ணுவதற்கு க்ளையண்ட் மேனேஜரின் அப்ரூவல் தேவை. அவர் இன்றுக்குள் அனுப்பிவிடுவார். அதன்பின் உங்களுக்குத் தெரியவரும்” இது தான் அதன் செய்தி.

பிரியா கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தாள். மின்னஞ்சலை பார்த்தவுடன், அவள் பார்த்த பார்வையில், “அதான் அப்பவே சொன்னேன்ல” என்பது போல் இருந்தது எனக்கு. 

பாஸிட்டிவ்வாக வர வேண்டும் வேண்டிக் கொண்டேன். இருந்தாலும் உள்ளூர பயம் கவ்விக் கொண்டிருந்து இருந்தது. 

ஆஃபிஸில் இரண்டு மணிநேரம் தாண்டி பசிக்கும் நேரம் வந்தது. மீட்டிங் போன பிரியாவுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன். துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தாள் பிரியா.

பிரியா : ”பிரபு, டேட் கன்பார்ம் ஆயிடுச்சி”

நான் : “ஓ.. நெஜமாவ… எப்போ?”

பிரியா :“அடுத்த வாரம் தான் இந்தியா போறோம்.. இன்னும் ஒரு ப்ரோப்பஸல் பாக்கி இருக்காம்?”

நான் : “அட ராமா ? அப்படி என்ன ப்ரோப்பஸல்? அதான் எல்லாம் முடிச்சிட்டோமே? யார் சொன்னா?”

டேவிட் : நம்ம நேரம். அந்த ப்ரோப்பஸல் யார்கிட்ட இருந்து தெரியுமா?”

நான் : “யாரு?”

டேவிட் :“திவ்யா தான். நீங்களும் இங்க இருக்குற ஒரு டீமும் நாளைக்கே கோலாலம்பூர் கிளம்பனும் அங்க மிட் வேலி சிட்டில காட்னர் ஆபிஸ்ல க்ளையண்ட் ஒரு ப்ராஜெக்ட் கொடுப்பார் அத நீங்க நம்ம ப்றாஜெக்டோட லிங்க் பண்ணி முடித்ததும் திவ்யா அத சீனா லைப் டவர்ல இருக்குற ஜிபென் ஆபீஸ்ல ப்ரெசென்ட் பண்ணிடுவாங்க. பிரபு நீங்களும் பிரியாவும், ஹேமா பீஜிங் கலம்புனதும் இந்தியா போகலாம்.  

நான் : அட கடவுளே எது என்ன சோதனை.. நகத்தைக் கடித்துக் கொண்டே உட்சகட்ட டென்ஷனில் இருந்தேன்.

வெள்ளிக்கிழமை பிரியாவோ ரொம்ப சீரியஸாக எல்லா பர்ச்சேஸையும் ஓடியாடி பண்ணிக் கொண்டிருந்தாள். “அடுத்த ஐந்து நாட்களை மட்டும் தாண்டிவிட்டால், அடுத்த வீக் எண்ட் இந்தியாவில் தான். திவ்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகவேண்டும்” என திவ்யாவை சமாளிப்பதற்கு வித்தியாசமாக ப்ளான் பண்ணிக் கொண்டிருந்தேன்.

சனிக்கிழமை 9.30க்கு லண்டனிலிருந்து ஸ்ரீலங்கன் 504  ஏர்பஸ் A320 டேக் ஆப் ஆனது. 

"டிங்கு டைரி - 53 காதல்மாளிகையின் முதல் வாசல் " அடுத்த பகுதி .........

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50]


------------------------------------------------------------------------------------------------------------



"உன்னழகை

உனக்கு

விளக்கிச் சொல்லவே

படைக்கப்பட்டேன்

நான்..

பதில் சொல்லத் தான்

உன் இதயத் துடிப்பிற்கு
என் இதயம்
துடித்துக் கொண்டிருக்கிறது.. .."

கருத்துரையிடுக Disqus

 
Top