"என் கண்மணி அவள் தொடுக்கும் பூமாலைக்காக
அந்த இறைவனே காத்திருப்பான்..
அவள் கரம் பற்ற
காலமெல்லாம் நான் காத்திருப்பேன்"
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 52 இந்தியா திரும்பும் முன்?
திங்கள்கிழமை அதிகாலை 7.30க்கு கோலாலம்பூர் விமானநிலையத்திற்கு நாங்களும் லண்டன் க்ளையண்ட் டீமும் வந்து சேர்ந்தோம். ஆஃபிஸ்க்கு வந்த நேரத்தில் இருந்து நான் டென்சனாகவும் பரபரவென இருந்தேன்.
பிரியா : “நீயும் ரெண்டு மூணு நாளா ஒரு ரேஞ்சா தான் இருக்க. ஸம்திங் ராங்” என கீபோர்டைத் தட்டிக் கொண்டு மானிடரைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
நான் : “நோ, ஐயம் ஆல்ரைட்” என அந்த நேரத்தில் சமாளித்தேன்.
“கோடி தேங்க்ஸ் கடவுளே” எனக் கடவுளுக்கு நன்றி சொன்னேன். அன்று முழுவதும் திவ்யா வரவில்லை. 5 மணிக்கே அலுவலகத்தில் இருந்து கிளம்பி ரூம் வந்துவிட்டேன். “இன்னும் நாலே நாலு நாள். எப்படியாவது இந்த கோலாலம்பூரில் இருந்து கெளம்பிவிட்டால் சைத்தானிடம் இருந்தும் தப்பிவிடலாம்” என மல்லாக்கப் படுத்துக் கொண்டே மனக்கோட்டைக் கட்டி கொண்டிருந்தேன்.
ஆனால் அந்த கோட்டை ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்கவில்லை. மறுநாள் காலை பேண்ட்ரியில் இருவரும் காஃபி ப்ரிப்பேர் பண்ணிக் கொண்டிருந்த போது,
திவ்யா : “ஹலோ, என்ன நீங்க இங்க எதிர்பாகலில. ஹொவ் யுவர் ஜெர்னி.. “ஓ.கே. எனிவே, இன்னும் ஒண்ணே ஒன்னு தான் பாக்கி இருக்கு. என்னோட ப்ரோப்பஸல், ப்ளஸ் அதோட ஸ்டேட்டஸ், ஸ்பான்ஸர்ஸ்கிட்ட டீலிங் ஓடிட்டு இருக்கு. இன்னும் டூ த்ரி டேய்ஸ்ல முடிஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்”
இந்த முறை என்னுடன் நேருக்கு நேர் பார்த்து டபுள்மீனிங்கில் பேசினாள் திவ்யா. அது எனக்குத் தெளிவாக புரிந்தது. அவள் பார்வையை தவிர்த்தேன்.
திவ்யா : “சப்போஸ், டீல் ஓகே ஆயிடுச்சின்னா, நெறைய்ய வேலை இருக்கும்.. நீங்க இன்னும் டூ வீக்ஸ் ஸ்டே எக்ஸ்டெண்ட் பண்ற மாதிரி இருக்கும்.” என்று சொல்லிவிட்டு அவசரமவசரமாக அவள் மேலாளரை நோக்கி ஓடினாள்.
நான் : “இவ பேசுறது எனக்கு மட்டும் டபுள்மீனிங்கா இருக்கா.. இல்ல அவ வேணும்னே அப்படி பேசுனாளா?” எனக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. பிரியாவிடம், “சீக்கிரமா கெளம்புனா நல்லா இருக்கும்”.
பிரியா : “நாம என்ன பண்ண? எல்லாம் அந்த ஸ்பான்ஸர் கையில தான் இருக்கு.”.
நான் : “ஆஹா.. பிரியா, யூ டூ?” என மனதுக்குள் அவளைத் திட்டிக் கொண்டேன். அன்று முழுவதும் திவ்யாவிடம் இருந்து அப்டேட்ஸ் வரவில்லை. ”இன்னும் மூணு நாள். 24 வொர்க்கிங் ஹவர்ஸ்” என்ற கவுண்ட்டவுனை மனதுக்குள் செட் பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து தூங்கினேன்.
மறுநாள் லஞ்ச் ஹவர் தாண்டி 3 மணிக்கு, திவ்யா இடத்திற்கு வந்தாள்.
திவ்யா : “உங்களுக்கு குட்நியூஸ். என்னன்னு கண்டுபிடிங்க பாக்கலாம் ?”
பிரியா : ”நாங்க நாளைக்கு ஊருக்கு போறோம்? கரெக்ட்டா?”.
திவ்யா : “ம்ம் ஊருக்கு போறீங்க ஆனா ஒருத்தர் மட்டும் தான்” தலையை வேகமாக ஆட்டினாள்.
நான் : ”அய்யோ” என அலறினேன்.
திவ்யா : “இல்ல பிரபு உங்க டிக்கட் கண்பாம் ஆய்டுச்சு ஆனா பிரியா வெள்ளிக்கிழமை தான் போவாங்க.. நியூ ப்ராஜெக்ட் சைனாவில் அதுவும் பிரியா மட்டும் தான் ” என சோகமாக சொன்னாள்.
எங்கள் இருவர் முகத்திலும் சோகம் ஓடியது.
பிரியா : நிலைமையைச் சரிசெய்ய பேச்சை ஆரம்பித்தால் “இப்போ என்ன ஆச்சுனு உன் மூஞ்சியை இப்படி வச்சிருக்குற நெக்ஸ்ட் வீக் நான் வந்திடுவேன். நீதா ஊருக்கு போகணும் போகணும்னு சொன்ன அதே மாதிரி நடந்திருச்சு என் கண்ணடித்தல்.
நான் : என் மனதிற்குள் ” இப்படி கண்ணடுச்சே என்ன மயக்குறாலே”
லேப்டாப்பை பேக் பண்ணிவிட்டு, அலுவலகத்தில் இருந்து கிளம்ப தயாரானோம். பிரியா ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள். நான் அவளுடைய லேப்டாப் பேகையும் எடுத்துக் கொண்டு லிப்ட் அருகே பிரியாவுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது புயலாக அந்த இடத்திற்கு வந்தாள் திவ்யா.
திவ்யா :“ஹாய் பிரபு” என்றாள். லைட்டாக வெட்கம் கலந்த டோனில் அவள் அழைத்தபோது பள்ளி நாட்களின் பீல் இருந்தது.
நான் : “ஹாய்ய்ய்” என இழுத்தேன். “போச்சு.. நான் மாட்டிக்கிட்டேன், காப்பாத்த யாரும் இல்லையா ” என சிவாஜி ரஜினி கணக்காக ரெஸ்ட்ரூம் நோக்கி பார்வையை வீசினான்.
திவ்யா : “எப்படி இருக்கப் பிரபு? சரியாவே பேச மாட்டேங்குற, மறந்துட்டீயா?” என என் கண்களை ஆழமாக பார்த்துக் கொண்டே கேட்டாள்.
நான் : ”நோ.. அப்படியெல்லாம் இல்ல.. உண்மையா சொல்லனும்னா, உன்னை அந்த ஆஃபிஸ்ல நான் எதிர்பார்க்கவே இல்ல” என சமாளித்தேன்.
திவ்யா : “ம்ம்ம்.. ஆமா. நான்கூட உன்னை அங்க எதிர்பார்க்கல.. ப்ளசண்ட் ஷர்ப்ரைஸ். நான் உனக்கு இந்தியா வந்து ஷாக் கொடுக்கலாம்ன்னு நெனச்சி இருந்தேன்” என தன் மனதில் கட்டியிருந்த ஆறு வருட காதல்மாளிகையின் முதல் வாசலைத் திறந்தாள்.
நான் : “ஷாக்கா? எப்ப வரலாம்ன்னு இருந்த?” என சொல்லிக் கொண்டே ரெஸ்ட்ரூம் நோக்கி மறுபடியும் பார்த்தேன். “இவ என்ன உள்ளே போய் ஒண்டே கிரிக்கெட் மேட்ச்சா பார்த்துட்டு இருக்கா? இன்னும் வரமாட்டேங்குறாளே?” என டென்ஷனில் இருந்தேன்.
திவ்யா : “உனக்கு ஞாபகம் இருக்கா பிரபு… கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு….
“என அவள் ப்ளாஷ்பேக்கை நீட்டி முழக்க ஆரம்பித்த நொடியில், சூப்பர்ஸ்டார் போல் வேகவேகமாக நடந்துவந்தாள் பிரியா. அவள் வருவதைப் பார்த்ததும் திவ்யா பேசுவதை நிறுத்திவிட்டாள். “ஹப்பாடா” என மொத்தமாகச் சேமித்துவைத்திருந்த மூச்சைப் பெருமூச்சாக வெளியே விட்டேன். நார்மலாக வந்த பிரியா எங்கள் இருவரின் அருகே நின்றுகொண்டாள். லிப்டினுள் நுழைந்து கொண்ட மூவரும் க்ரவுண்ட் ப்ளோர் வரும்வரை பேசிக் கொள்ளவில்லை.
திவ்யா : “தென்.. பை பிரியா.. நாம நாளைக்கு பேசலாம் பிரபு. பை” என சொல்லிக் கொண்டே பார்க்கிங் நோக்கி நகர்ந்தாள். ரெஸ்பான்ஸ் வராமல் போகவே நின்றவள் திரும்பிபார்த்தபோது
நான் : “ஷ்யூர்” என தலையை அசைத்துக் கொண்டேன்.
பிரியா :“இங்க என்ன நடக்குது?” நார்மலாகக் கேட்டது எனக்கு மூளையில் தந்தி அடித்தது.
“உண்மையைச் சொல்லிவிடலாமா இல்லை மூணு நாள் தானே சமாளித்துவிடலாம்?” என யோசித்ததில் சமாளித்துவிடலாம் என முடிவெடுத்து ஏதோ சொல்லி சமாளித்தேன்.
ஆனால் அதுதான் நான் பண்ணிய தவறு!
"எத்தனை தடவ தான் ப்ரோப்பஸ் பண்றது " அடுத்த பகுதி தொடரும்.........
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51]
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51]
------------------------------------------------------------------------------------------------------------
[52] <<----- -----="">>-----><--- --=""> [54]--->
"தேடுதலுக்கும்
தேவைக்கும்
அப்பாற்பட்ட
பந்தமாய்
கிடைத்த
அறியவகை
பொக்கிஷம்
நீ
எனக்கு.."
கருத்துரையிடுக Facebook Disqus