எதிர்பார்க்க முடியாத
சில விஷயங்கள்
எல்லோர் வாழ்க்கையிலும்
கடந்து போகிறது ,,,,
" விதியும் சதியும் "
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 54 எத்தனை தடவ தான் ப்ரோப்பஸ் பண்றது
பிரியா மனதில் வேற ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. க்ளையண்ட் ஆஃபிஸில் இருந்த எல்லாரையும் பர்ஸனலாக சாயங்காலம் பார்ட்டிக்கு அவள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தாள். திவ்யாவையும் இன்வைட் பண்ணினாள். திவ்யா என்ன என கேட்டதற்கு, பிரியா “சஸ்பென்ஸ்” என்றாள். ஆனால் இவ்வளவு தூரம் பிரியா பண்ணிக் கொண்டிருக்கும் அரேஞ்ச்மெண்ட்ஸ் எனக்குத் தெரியாது.
என் அப்போதைய லட்சியம் எல்லாம் திவ்யாவிடம் இன்னிக்கு பொழுதைக் கழிப்பது தான். அதனால் பிரியாவின் சைலண்ட் மூவ்மென்ட்ஸை நான் கண்டு கொள்ளவில்லை. மதிய உணவு முடிச்சதும் பிரியா ஹோட்டலில் மீதமிருக்கும் வேலைகளை செய்யக் கெளம்பிவிட்டாள். நான் கேட்டதற்கு, “எல்லார்கிட்டயும் இன்பார்ம் பண்ணிட்டேன். கொஞ்சம் உடம்புக்குச் சரியில்லை. வரும்போது ஏர் டிக்கெட்ஸ் ப்ரிண்ட் அவுட் எடுத்திட்டு வந்திரு” எனச் சப்பையான காரணங்களுடன் சமாளித்து கெளம்பிவிட்டாள்.
மணி 3ஐ நெருங்கிக் கொண்டிருந்தபோது, கெளம்பத் தயாரானேன். அப்போது திவ்யா அங்கு வந்தாள்.
திவ்யா : “என்ன பிரபு, நேத்து நான் பேசலாம்ன்னு சொன்னேன்.. அது என்னன்னு கேட்கவே மாட்டியா?”
நான் : எனக்கு நாக்கு வறண்டது, “இல்ல. கொஞ்சம் வேலை இருந்தது, இப்ப சொல்லு. என்ன?”
திவ்யா : “வேலை முடிஞ்சதுல்ல. வா நாம பேண்ட்ரி போகலாம்” என திவ்யா சொல்லிக் கொண்டு லிஃப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
2 நிமிடங்கள் கழித்து.. “என்ன பேசுவது?” என தெரியாமல் நான் வானத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, திவ்யா ஆரம்பித்தாள்..
திவ்யா : “உனக்கு ஒரு கிஃப்ட். பிரபு. ஓபன் பண்ணு” என என் கையினில் திணித்தால்.
ஓபன் பண்ணினான். கல்ச்சுரல்ஸ்டே அன்று பட்டுவேஷ்டியில் நான் நிற்க, பட்டுச்சேலையில் திவ்யா உடன் இருவர் மட்டும் நிற்கும் அழகான போட்டோ லேமினேட் செய்யப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த எனக்கு என்ன சொல்வதென தெரியாமல் பரவச நிலையில் கலங்கினேன்.
திவ்யா : “நாட்கள் தான் எவ்வளோ பாஸ்ட்டா போகுதுல்ல பிரபு.. நேத்து தான் ஸ்கூல் ஃபேர்வெல் டே முடிஞ்சி போனது மாதிரி இருந்துச்சி?”
நான் : ”ம்ம்ம்” என ஆர்வமில்லாமல் ம்ம் கொட்டினேன்.
திவ்யா : “ஆனா அந்த நாட்கள் எல்லாம் மறக்கவே முடியாது பிரபு. அப்ப நான் தான் உன்னை ரொம்பவே ஹர்ட் பண்ணேன். அதான் இப்ப மொத்தமா ஸாரி சொல்லிட்டு…?”
நான் : “ஸாரி சொல்லிட்டு.. தென்?” அதுவாக இருக்கக்கூடாது என பரபரத்தேன்.
திவ்யா : “ஸாரி சொல்லிட்டு என்ன நீ ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணம் பண்ணிக்கலாம்” என வெட்கத்துடன் சொன்னாள்.
“நாசமா போச்சு“ என மனதிற்குள் கத்தினேன்.
"அழுவதா சிரிப்பதா? எனக்குத் தெரியவில்லை " அடுத்த பகுதி தொடரும்.........
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53]
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53]
------------------------------------------------------------------------------------------------------------
புகையிலை கேன்சரை உருவாக்கும்
டாஸ்மாக் டான்சரை உருவாக்கம்
அதுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த இது நல்ல ஸிங் ஆய்ருக்கு
கருத்துரையிடுக Facebook Disqus