0


"உன்னை ஓர் குழந்தை போல் எண்ணி விட்டேன் அதனால் உனை விட்டுபிரிய மனமில்லை எனக்கு தனிமையை எனக்கு நீ தந்து போனாலும் விழிகள் தேடுதல் மட்டுமல்ல இதயம் தேடுவதும் நிற்காதே எனக்கான உலகில் உனக்கு ஓர் இடம் படைத்தேன் அதில் நீ மட்டும் வாழ சாத்தியம்"


----------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 55 க்ளைமேக்ஸ்?? இல்ல க்ளைமேக்ஸ் மாதிரி


திவ்யா : “என்ன பிரபு.. நான் சொன்னதை கேட்டு என்னை ஓடி வந்து கட்டிபிடிச்சுக்குவேன்னு நெனைச்சேன்?” என என் முகத்திற்கு நேராக வந்து கேட்டாள்.

நான் : “இது கண்டிப்பா என்னால முடியாது” என முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னேன்.

திவ்யா : “ஏன்????” எனக் கலவரமான முகத்துடன் கத்தினாள்.

நான் : “நாலுவருஷமா நாய் மாதிரி உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தேன்ல, அப்பவே இத சொல்லி இருக்கலாம்ல?” எனப் பதிலுக்கு கத்த ஆரம்பித்தேன்.

திவ்யா : “அந்த நாலு வருஷத்துல ஒரு நாள் கூட நான் உன்னை லவ் பண்றேன்னு உனக்குப் புரியவே இல்லையா???? அதான் ஆட்டோகிராப் நோட்ல கூட அப்படி எழுதி கொடுத்தேன்ல?” கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது.

நான் : “எனக்கு புரியலைன்னே வச்சிக்கோ.. ஒரே ஒரு வாட்டி நீயும் என்ன லவ் பண்றேன்னு சொல்லி இருந்தேன்னா, நாலு வருஷம் இல்ல நாப்பது வருஷம் ஆனாலும் உனக்காக நான் காத்திட்டு இருந்திருப்பேன். ஆனா நீ பண்ணது எல்லாமே கண்ணாமூச்சி விளையாட்டு. நீ எழுதிக் கொடுத்ததை ஒவ்வொருவாட்டி படிக்கும்போதும் ஒவ்வொரு மீனிங். அவ்வளோ எழுதின நீ “ஐ லவ் யூ டூ டா”ன்னு முடிச்சி இருந்தேன்னா, இந்நேரம் எப்படி இருந்திருக்கும்?” நான் ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டேன்.

திவ்யா : “இப்ப மட்டும் என்ன பிரபு.. இந்த நாலு வருஷத்துல என்னை மறந்துட்டீயா?”

நான் : “இந்த நாலுவருஷம் அட்லீஸ்ட் ஒரு மின்னஞ்சல், ஒரு ஃபோன் கால். நீ ஹையர் ஸடடீஸ் பண்ணப் போயிருக்கன்னு எவனோ ஒருத்தன் சொல்ற அளவுக்கு நான் யாரோ ஒருத்தன் ஆயிட்டேன். நீ இதெல்லாம் ஏதோ ஒண்ணு பண்ணியிருந்தாக் கூட உன்மேல இருந்த லவ் அப்படியே இருந்திருக்கும்”

திவ்யா : “இப்ப அந்த லவ் அப்படியே இல்லையா பிரபு. நான் ஏன் அப்படி பண்ணேன், என்னோட பேமிலி ப்ராப்ளம்ஸ் இதெல்லாம் உனக்குத் தெரியுமா?”

நான் : “என்ன உண்மையிலேயே நீயும் லவ் பண்ணியிருந்தேன்னா, என்னையும் உன் பேமிலில ஒருத்தனா நெனச்சி எல்லாம் சொல்லி இருந்திருப்ப? எவனோ ஒருத்தனுக்கு மின்னஞ்சல் அனுப்புற நீ, எனக்கு அனுப்பியிருக்கலாம்ல..”

திவ்யா : “ஓ.கே. லீவ் இட்.. நெக்ஸ்ட் மன்த், நேர்ல வந்து உன்கிட்ட இது பத்தி பேசலாம்ன்னு இருந்தேன். லக்கிலி…”

நான் : “டூ லேட்?”

திவ்யா : “இப்ப நீ என்ன சொல்ல வர்ற?”

நான் : “எனக்கு மேரேஜ் ஆயிடுச்சி”  ஒரு பெரிய பொய்யைச் சொன்னேன்.

திவ்யா : “பிரியா உனக்கு இன்னும் ஆகலைன்னு சொன்னா” அதிர்ச்சியின் உச்சியில் பொறுமையிழந்தாள்.

நான் : “ஆமா.. மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சி.. இன்னும் டூ வீக்ஸ்ல கல்யாணம். உன்னால ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுக்க விரும்பல?”

திவ்யா : ”நீ ஆசைப்பட்ட பொண்ணு நான்.. வேணாமா பிரபு?” கண்களில் காதலை தேக்கிவைத்துக் கேட்டாள்.

நான் :  “நான் ஆசைப்பட்ட பொண்ணை விட, என்னை ஆசைப்பட்ட பொண்ணு தான் எனக்கு முக்கியம்” அவள் முகத்தை பார்க்க தைரியம் இல்லாமல் வானத்தைப் பார்த்து சொன்னேன்.

திவ்யா : ”ஆல்ரைட்.. இதுக்கு மேல உன்னை போர்ஸ் பண்ண விரும்பலை பிரபு. பை” என சொல்லிவிட்டு விருவிருவென போய்விட்டாள்.

நான் திரும்ப என் இடத்திற்கு வந்து எல்லாவற்றையும் பேக் பண்ணிவிட்டு கெளம்பினேன். லிஃப்டிற்கு அருகில் சென்றபோது திவ்யாவும் நின்றிருந்தாள். “ஹோட்டல் தானே போற. நான் ட்ராப் பண்றேன்.. வா பிரபு” என்றாள் திவ்யா.
காரில் போய்க் கொண்டிருந்தோம். திவ்யா அருகில் நான் அமர்ந்திருந்தேன். எனக்கு இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தது. ஆனால் திவ்யா நிலநடுக்கம் வந்துபோன இடம் போல் இருந்தாள். சாலையை பார்த்துக் கொண்டே திவ்யா சீரியஸாகக் கேட்டாள்.

திவ்யா : “நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா பிரபு?”
நான் : அழுவதா சிரிப்பதா?  எனக்குத் தெரியவில்லை. 

"டீலா நோ டீலா? " அடுத்த பகுதி தொடரும்.........

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] 


----------------------------------------------------------------------------------------------------------------------------------



"கோபத்திலும் தன்னை மறந்து காட்டும் சின்ன சின்ன அக்கறை போதும் ஊடலை கூட நேசிக்க, "

கருத்துரையிடுக Disqus

 
Top