"வளர்பிறையாய் உன் அன்பு
முழுமதியாய் நம் காதல்
தேய்பிறையாய் உன் பிரிவு
#தொலைத்தூர_காதல் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 56 அழுவதா சிரிப்பதா?
திவ்யா : “நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா பிரபு?”
நான் : அழுவதா சிரிப்பதா? எனக்கு தெரியவில்லை.
திவ்யா : ஒரு நிமிடம் முழுவதும் போனபின்பு, பொறுமையில்லாமல் கேட்டாள், “உண்மைலயேவா?”
நான் : “நான் எதுவுமே சொல்லலீயே?”.
திவ்யா : “அப்ப நான் தான் அழகுன்னு சொல்ற..” என சொல்லிக் கொண்டே “ஹா ஹா ஹா” வென கார் அதிர சிரித்தாள்.
நான் : “என்ன பொண்ணு டா இவ” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளை வெறித்துப் பார்த்தேன். ஒரு லுக்ல பார்த்தா வில்லன்(வில்லி) சிரிப்பது மாதிரியும் இருந்தது.
திவ்யா : “ஆனா ஒண்ணு பிரபு.. இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாமலேயே நீ இந்தியா போய் இருக்கலாம். நீ இப்ப இவ்வளோ சொன்னதுனால தான், என்னால் ஈஸியா எடுத்துக்க முடியல” என லைட்டாக கண்கலங்க ஆரம்பித்தாள். பெண்களால் மட்டும் தான் ப்ராக்சன் ஆப் செகண்டில் மூட் மாற்றி பேசமுடியும்.
நான் : “இல்ல.. அது வந்து..” அவளைச் சமாதானப்படுத்தலாம் என ஆரம்பித்தேன், ரிஸ்க் எடுக்க விரும்பாததால் நிறுத்திக் கொண்டேன்.
திவ்யா : “இட்ஸ் ஓ.கே. ஆனா என்னைக் கல்யாணத்துக்கு கூப்பிடுவீயா பிரபு” என யோசித்துவிட்டுக் கேட்டாள்.
நான் : “ “
திவ்யா : “சரி.. ஓ.கே. பட் ஒன் கண்டிஷன்? நீ அதுக்கு ஒத்துக்கிட்டா நான் கல்யாணத்துக்கு வரமாட்டேன்” தூண்டிலில் மண்புழுவை வைத்துக் கொண்டு வீசினாள்.
எனக்கு அந்த கண்டிஷன் என்ன என தெரியாமல் ஒத்துக்கொள்ளக் கூடாது என நினைத்துக் கொண்டிருந்தாலும், இவளைக் கல்யாணத்திற்காக இந்தியா வரை வரவைத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.”ஒரு வேளை கிஸ் கேப்பாளோ? 7/ஜி ரெயின்போ ஸ்டைல்ல… அப்படி இருக்குமோ, ஒருவேளை இப்படி இருக்குமோ?” என ஏடாகூடமாக மண்டையைக் குடைந்தேன். “இவ கேரக்டர் நல்லவளா, இல்ல வில்லியா என இந்த செகண்ட் வரை புரியாமல் நடிகர் பாண்டியராஜன் போல திருதிருவென முழித்தேன்.
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55]
---------------------------------------------------------------------------------------------------------------------------------
"மொட்டை மாடியில் நிற்பவர்கள் எல்லாம்,அந்த அழகான நிலவை ரசிப்பதற்க்காகத்தான் நிற்கிறார்கள் என்று கணித்துவிடவேண்டாம், தண்ணீர் டேங்க் நிரம்பியதுமே மோட்டரை ஆப் செய்யலாமெனக்கூட நிற்க்கக்கூடும்...!! "
கருத்துரையிடுக Facebook Disqus