"நீ என்னை
வேண்டாமென்று
விலகிச் விலகி
சொல்லும் போது தான்
நீ வேண்டும்
வேண்டுமென இன்னும்
அடம் பிடிக்கிறது
பாழாய்ப்போன என் மனம்"
------------------------------------------------------------------------------------------------------------
[57 ]முந்தைய பதிவு திவ்யா : ”ஹெல்லோ… வாட்ட்? டீலா நோ டீலா?” என தைரியமாக கேட்டாள்.------------------------------------------------------------------------------------------------------------
நான் : 30 செகண்டுகள் கழித்து, “டீல். என்ன கண்டிஷன்?” என கேட்டுவிட்டு 20-20 மேட்ச்சின் கடைசி 2 ஓவர் போல இதயம் குதிரையின் ஒட்டம் போல துடித்தது.
திவ்யா : “ரைட்.. நீ கட்டிக்கப் போற பொண்ணை நான் பார்க்கணும்.” என்றாள் பொறுமையாக.
நான் : ”வாட்ட்ட்ட்ட்ட்… நீ என்ன விளயாடுரையா ?”
திவ்யா : “யெஸ்.. ஐ’யாம்.. நீ ஒண்ணும் டென்ஷன் ஆக வேண்டாம். அவகிட்ட நான் பேச மாட்டேன். நீ இண்ட்ரோ கூட கொடுக்கத் தேவை இல்ல.. தூரத்துல இருந்து பார்த்துட்டு, அப்படியே போயிடுறேன். ஒருவேளை நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா, நான் கல்யாணத்து அன்னைக்கு முன்னாடி வந்து……”
நான் : என்னது கல்யாணத்துக்கு வந்தா ”வெயிட் வெயிட்.. நான் எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே ஏன் அடுத்த ஆப்ஷனை பத்தி யோசிக்கிற?”
திவ்யா : “சரி சொல்லு.. உன்னோட முடிவு என்ன?”
கார் ஹோட்டல் பார்க்கிங் ஏரியாவில் உள்ளே நுழைந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, லிப்ட் அருகில் காத்திருந்தோம். இன்னும் திவ்யா என் முகத்தையே ஒரு சிறுகுழந்தை போல பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் : “ஓ.கே. நீ பேசலாம், பட், நம்ம விஷயத்தைப் பத்தி பேசக்கூடாது. ப்ராமிஸ்” என ஜெர்கினில் இருந்து கையை உருவி அவள் முன் நீட்டினேன்.
உடனே குதூகலமாக அவளும் கையை க்ளோவ்ஸில் இருந்து கழற்றி ரோஜா மலர் போல அடர் சிவப்பு ரத்தம் உள்ளங்கையில் ஓட என் உள்ளங்கையில் வைத்து பற்றிக் கொள்ள… நான்கு வருடத்திற்குப் பின் அதே டச். அதே குச்சி குச்சியான விரல்கள். நான் அவள் விரல்களுக்குள் என் விரல்களை அழுத்தும் நேரத்தில், லிப்ட் திறக்க வெளியே வந்தாள் பிரியா.
உடனே கைகள் உதறப்பட்டன.
பெண்ணுக்கு எதிரி பெண்.. ஆணுக்கும் எதிரி பெண்.
"ஒரு ஸ்பார்க் " அடுத்த பகுதி தொடரும்.........
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56]
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56]
------------------------------------------------------------------------------------------------------------
"தெய்வங்கள் கூட மிரண்டு போகும்
விஞ்ஞானிகள் கூட அரண்டு
போவார்கள்
குழந்தைகளின் செயல் கண்டு
"பறவைக்கு மலரின் மணம் மணக்க செய்யும்" குறும்புக்காரன்"
குழந்தைதனம்
கருத்துரையிடுக Facebook Disqus