"யாரோ ஒருவரிடம் நான் பழகி கொள்ளலாம் யாரோ ஒருவரை நான் நேசிக்கவும் செய்யலாம் யாரோ ஒருவரை நான் நினைத்தும் கொள்ளலாம் உன்னை மறக்க நான் என்ன செய்ய வேண்டும்."
------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 58 பெண்ணுக்கு எதிரி பெண்.. ஆணுக்கும் எதிரி?
அங்கே இருந்த அசாதாரண சூழ்நிலையை பிரியா சமாளித்துக் கொண்டு, திவ்யாவை ரூமுக்கு அழைத்து சென்றாள். இரண்டடி தூரத்தில் நான். உடனே உள்ளே ஒரு ஸ்பார்க் வெடித்தது. “இந்த நிமிடம் வரை திவ்யா எதற்கு ஹோட்டல் வந்திருக்கிறாள்?” எனத் தெரியாததால், அதைப் பற்றி யோசிக்காமல் இருந்ததால் டென்ஷன் ஆனேன். அவசரம் அவசரமாக அவர்களைப் பாலோ பண்ணினேன்.
பிரியா ரூமில் அவர்கள் உள்ளே செல்ல, நானும் உள்ளே நுழைந்தேன். நான் உள்ளே காலடி வைத்த நொடியில், என் கண்கள் குருடானது. உள்ளே இருந்த அணைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. கேண்டிலின் மெல்லிய வெளிச்சம் ஹாலின் நடுவே எரிய ஆரம்பிக்க, சுற்றியும் 8 பேர் சீராக கைதட்டிக் கொண்டிருக்க, லேப்டாப் ஸ்பீக்கரில், “ஹேப்பி பர்த்டே டூ யூ.. ஹேப்பி பர்த்டே டூ யூ.. “ என சின்னக் குழந்தை பாட அடுத்த வரியை, எல்லாரும் சேர்ந்து மொத்தமாக, “ஹேப்ப்பி பர்த்டே டூ பிரபுஷ்ஷ்ஷ்ஷ்” என முடிக்க, நான் பர்த்டே கேக் அருகில் வர போம் ஸ்ப்ரே டப் என இரண்டு பக்கம் இருந்து அடிக்கப்பட்டது, மேலே இருந்து ஜிகினா பேப்பர் கட்ஸ் கொட்டப்பட அனைத்து விளக்குகளும் எரிந்தன. பள்ளி பைனல் இயர் பர்த்டே செலிப்ரேஷனுக்கு அப்புறம், நான் இப்படி க்ராண்ட்டா கொண்டாடும் பர்த்டே இது. நான், எல்லாருக்கும் நன்றி சொல்லிவிட்டு கேக் கட் பண்ணினேன். கட் பண்ணிய முதல் பீஸை பிரியா முன்னே வந்து எனக்கு ஊட்ட, திரும்ப நான் பிரியாவுக்கு ஊட்ட, திவ்யா காதுகளில் இருந்து புகை வர ஆரம்பித்தது.
நான் எல்லாருக்கும் கேக் கொடுத்துவிட்டு திவ்யா அருகில் வந்து நின்றேன். “நீ கூட மறந்துட்ட. பாரு, பிரியா எப்படி அரேஞ்ச் பண்ணி இருக்கான்னு?” எனப் பெருமையாக சொன்னேன். “இப்ப எதுக்கு தேவையில்லாம என்ன அவ கூட கம்பேர் பண்ற?” எனக் கடித்தாள். அப்போது தான் ஆர்வமிகுதியில் நான் செய்த முட்டாள்தனம் உறைத்தது. நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
பிரியா : “ஓ.கே ப்ரண்ட்ஸ். உங்க எல்லாரையும் நான் இன்வைட் பண்றதுக்கு பிரபு பர்த்டே மட்டும் காரணம் இல்ல” வேண்டு மென்றே கொஞ்சம் இடைவெளி விட்டாள்.
எல்லாரும் ஆச்சர்யமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எனக்கு தலைக்குள் லைட்டாக மணி அடித்தது.
பிரியா : “ஆல்ரைட். என்னோட மேரேஜ் இன்விடேஷன் கொடுக்கிறதுக்கும் தான்” என அவள் சொல்லி முடிக்க அங்கே இருந்த அனைவரும் திவ்யா உள்படக் கைதட்டி “கங்கிராட்ஸ்” எனக் கத்தினர். "என்னோட வுட் பி-க்காக நான் ஒரு ரிங் கூட வாங்கி இருக்கேன்” என எடுத்துக் காட்டினாள். கூட்டம் ‘வாவ்’ என வாயைப் பிளந்தது.
“ஓ.கே. அவர் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?”
கைதட்டல் அமைதியானது. இரண்டு ஸ்டெப்ஸ் முன்னால் நடந்து வந்தாள்.
திவ்யாவிற்கு அருகில் நின்றிருந்த என் முன் மண்டியிட்டு,
பிரியா : ”ஐ லவ் யூ பேபி” எனக் கையை விரித்துச் சொல்லிவிட்டு, மோதிரத்திற்காக என் வலதுகையைக் கேட்டாள்.
எனக்கு உற்சாகம் பியர் பாட்டில் போல் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் பொறுமையாக அவள் செய்வதை ரசித்துக் கொண்டே அவளுக்காக வலதுகையைக் கொடுக்க, அவள் மோதிரம் போட, கூட்டத்தினர் கைதட்டி கூச்சல் போட்டனர்.
அவள் முடித்ததும், நான் அவள் தோள்களைப் பற்றி தூக்கி பிரியாவைக் கட்டிப் பிடித்து சுற்றினேன். இன்னும் கூட்டம் ரசித்தது. “தேங்க்ஸ் ஹனீ” எனப் பிரியா முகத்தருகில் சொல்லிவிட்டு நிமிர்ந்தேன். நிமிர்ந்தால் திவ்யாவின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. நான், “ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” எனக் கெஞ்சினேன். எதுவும் தப்பாக நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொண்டேன்.
"அடுத்த சிலமணி நேரம் " அடுத்த பகுதி தொடரும்.........
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57]
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"துடிக்கும் என் கண்களுக்கு
உன் கண்களே மருந்தாக
இருந்த போதிலும்
உன் கண்களைப் பார்த்து
பேச முடியாத மாயம் தான்
என்னவோ?
உன் மேல் உள்ள
காதல் தான் காரணமோ?"
கருத்துரையிடுக Facebook Disqus