0
பிரியா என்னை விட்டு விலகி, ஊரில் இருந்து வந்த இன்விடேஷனை எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள். திவ்யாவிற்கு கொடுக்க அருகில் வந்த போது, திவ்யா பிரியாவை கட்டிப்பிடித்தாள். “கங்கிராட்ஸ். க்ரேட் ச்சாய்ஸ்” என உடைந்த குரலில், உற்சாகம் போர்த்தி விஷ் பண்ணினாள். “கங்கிராட்ஸ் பிரபு” என எனக்கும் பார்மலாக விஷ் பண்ணிவிட்டு பார்ட்டியை விட்டு விலகி ஓடினாள். யாரும் அதை கவனிக்கவில்லை, என்னைத் தவிர.

அன்று இரவு எல்லா பார்மலிட்டிகளையும் முடித்துவிட்டு, வெய்டிங் ரூமுக்கு சென்றோம். சீட்டில் உட்கார்ந்து கொண்டு பிரியா ஆரம்பித்தால். 

பிரியா :“எப்பவும் நான் கிளம்பும்போது க்ளையண்ட் ஆஃபிஸிலிருந்து வருவாங்க. இந்தவாட்டி யாரையும் காணோம்?” 

நான் : “ஓ.. அப்படியா.. யார் வருவா?” 

பிரியா : “திவ்யா. நேத்து பார்ட்டில கூட ரொம்ப மூட் ஆப்பா இருந்தா. ரைட், அவளைப் பத்தி பேசி என்ன பிரயோஜனம்?” கல்யாணம் சும்மா அதிரணும். என்னோட ரொம்ப நாள் கனவு. நல்லா க்ராண்ட்டா பண்ணனும்ன்னு” 

நான் : “ம்ம்ம்.. பர்த்டே பார்ட்டிலயே இப்படி க்ராண்ட்டா சொல்லுவேன்னும் நான் எதிர்பார்க்கல.” 

பிரியா : “ம்ம். ஆமா அது தான் என் ஸ்பெஷல். ஹேய்.. அங்க உனக்கு ஒரு கிஃப்ட் வந்திச்சி.. இந்தா” என ஒரு பார்ஸலை நீட்டினாள்.

நான் : என்ன என யோசித்துக் கொண்டே பிரித்தேன். உள்ளே திவ்யா ப்ரசண்ட் பண்ணப் பிரபு-திவ்யா பள்ளி போட்டோ. ஒரே செகண்டில் மொத்த சந்தோஷமும் பில்டர் ஆகி பிரியாவின் முகத்தைப் பார்த்தேன்.

பிரியா : “எல்லாம் தெரியும்….” கொஞ்சம் இடைவெளி விட்டு, “இதுவும் என் ஸ்பெஷல்” என 0.0001% கூடக் குறையாத அதே காதலின் கிரக்கத்துடன் கண்ணடித்தாள். இது என்னுடைய ஸ்பெசல் கவர் என் பிளைட் டேக் ஆன் ஆனதும் தான் இத ஓபன் பண்ணனும் என என் கைகளில் திணித்தால் . 

நான் அவள் தோள்களை பிடித்து அணைத்துக் கொள்ள விமான நிலைய ஒலிபெருக்கியில் விமான தகவல் வந்தது. விடை பெற மனமில்லாமல் வழியனுப்பினேன். எக்ஸ்லறேட்டரில் என்னை அவள் திரும்பி புன்னகையுடன் தன் கை அசைத்து என்னைப் பார்த்து கண்ணடித்து நகர்ந்தால்.

அவள் நகரும் ஒவ்வொரு நொடிகளும் என் இதயம் படபடப்பு அதிகரித்தது, நீரை விட்டு வெளியே வந்த மீன் போல என் மனம் எதோ ஒரு இனம்புரியாத பயம் உருவானது. எனக்குள் எதோ ஒரு இருள் சூழ்ந்தது போல தோன்றியது.
    

2014 மார்ச் 8, இரவு 12.30க்கு போயிங் எம்.எச்370 கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்ல ப்ளைட் டேக் ஆன் ஆனது.

அப்படி என்ன தான் அந்த கவர்ல இருக்குனு அத பிருச்சு பாத்தா உள்ள ஒரு கடிதம்............

"ஹாய் மை டியர் செல்ல குட்டி......

                              நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் என் ஆசை என்னன்னு கேக்க கூடாது அதுக்கு தான் இந்த கடிதம் எப்ப எல்லாம் நான் உன் பக்கத்தில் இல்லையோ இந்த கடிதம் என்னை உண்பக்கத்தில் இருக்க வைக்கும்..

'டா' போட்டு பேச வேண்டும். இப்ப மட்டும் நான் எப்படி உன்ன கூப்பிடுறேன்னு கேக்காத.

காரணமிலாம விளையாட்டுச் சண்டை போடணும். இதுக்கு முன்னாடி போட்ட சண்டைகள் விட அதிகமா..

நான் உன்னை சமாதானம் செய்யவில்லை என்றாலும் நீ சமாதானமாகிட வேண்டும்

நான் சமாதானம் செய்ய வந்தாலோ நீ வேண்டுமென்றே பிடிவாதம் செய்ய வேண்டும்.

டிவி பார்க்கையில் புத்தகம் படிக்கையில் எனை இழுத்து அருகில்
அமர்த்தி உன் தோல் சாய்ந்து கொள்ள வேண்டும்.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் கைக்கோர்த்து நடந்து ரசிக்க வேண்டும்.

உன்னை தூங்க விடாமல் நான் தொணதொணவென எதாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் நீயும் அதை பொறுமையாக ரசிக்க வேண்டும்.

நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கையில் பாதியிலேயே நீ உறங்கி விட அதையும் நான் ரசிக்க வேண்டும்.

அவ்வப்போது அடம் பிடிக்க வேண்டும், அடிக்கடி கட்டிக் கொள்ள வேண்டும்

சமையல் செய்கையில் கூட உன்னை அருகில் நிற்க சொல்லி இம்சிக்க வேண்டும்.

அலுவலக வேலைகளில் நீ மும்முரமாய் இருக்கையில் வீட்டு வேளைகளில் நான் மும்மரமாக இருக்கையில் உனக்கு பிடித்த பாடல் தொலைக்காட்சியில் வந்தால், உன்னை நான் அழைக்க வேண்டுமென நீ எதிர்பார்க்க வேண்டும்.

கண்ணாடி முன் நின்று நீ என்னை பின்னாலிருந்து அணைக்க பொருத்தம் பார்த்து மகிழ வேண்டும்.

அலுவலகம் சென்று ஐந்து நிமிடத்திற்கெல்லாம் மிஸ்யூ அனுப்ப வேண்டும்.

அம்மா வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி வருவதாக சென்றாலும் என்னிடமே ஓயாமல் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

உன் சுகதுக்கங்களை எல்லாம் நல்ல நண்பனிடம் பகிர்வது போல் என்னிடம் பகிர்ந்து யோசனை கேட்க வேண்டும்.

நான் சிரிக்காமல் இருந்தால் நீ முறைக்க வேண்டும். நான் முறைத்துக் கொண்டிருந்தால் நீ எனக்கு முத்தமிட வேண்டும்.

நீ கொஞ்சம் குரலுயர்த்திப் பேசினாலும் என் கண்ணீர் கண்டு நீ கரயவேண்டும்.

மொட்டைமாடியில் நட்சித்திரங்கள் ரசித்தபடி என் அலுவலக கதைகளையெல்லாம் உன்னிடம் பேசித் தீர்க வேண்டும்.

மொழி தெரியாத ஊர்கள் தேசங்கள் சென்று காடு மலைகளென சுற்றி
திரும்ப வேண்டும்.

நமக்குள் சண்டை வேனும், அது முத்தில் முடிய வேனும்.

நான் எழுதும் கவிதை அத நீ வாசிக்க நான் கேட்க வேண்டும்.

என் மிதிவண்டியில் தொலை தூரம் செல்ல வேண்டும்.

வருடங்கள் மாறும் போதும் நமக்குள் வயது கூடாமல் இப்படியே
இருந்திட வேண்டும்

நீ கட்டி அனைக்கும் அந்த நோடியில் என் உயிர் பிரிய வேணடும்."


~உன் கிறுக்கி 

என் கண்ணில் நீர் தேங்க ஏற்-இந்தியா விமான அழைப்பு வர நான் சிறு குழைந்தை போல என் கண்ணீரை துடைத்துக் கொண்டு அவள் நினைவுகளோடு கிளம்பினேன். எக்ஸ்லறேட்டரில் செல்லும்பொழுது யாரோ என்னைக் கவனிப்பது போல் உணர்ந்து திரும்பி பார்க்க யாரும் இல்லை. 

விமான நிலையத்தில் ஒரு தூணுக்கு பின்னால் திவ்யா தன் கண்களில் வழியும் கண்ணீரோடு நின்றால்.

சிலமணிநேரத்தில் ஒரு செய்தி பரபரப்பானது. 

கருத்துரையிடுக Disqus

 
Top