0

Image result for love meme tamil

"கை தவறினால் பொருள் உடையும் என யோசிப்பவர்கள், வாய் தவறினால் மனம் உடையும் என யோசிப்பதில்லை."


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 61 என் மனதில் திறந்த இருட்டறை

கதவைத் திறந்த குமாருக்கு ஷாக்.....

குமார் : டேய் இந்த நேரத்துல இங்க எதுக்குடா வந்த. ஏதாவது டிப்ஸ் வேணுமா போன்ல கேட்டுத் தொலைய வேண்டியதுதானே.   

நான் : நீ போய் முதல்ல சரக்கு வாங்கீட்டு வா.. அத அப்புறம் மெதுவா பேசலாம்.

குமார் : லூசட நீ, உன்னக்காக உன் வீட்டில ஒரு பொண்ணு காத்துட்டு இருக்கா நீ என்னடானா கவலையில்லாம சரக்கடிக்கலாம்னு சொல்லுற. டேய் இந்த பொண்ண பார்த்தா நல்லவளா தெரியுது எல்லாம் சரியாகிவிடும் நீ கொஞ்சம் அமைதியா இருடா ப்ளீஸ் என்று குமார் கெஞ்ச.......

நான் : நீ போய் வாங்கிட்டு வரியா இல்ல நானே போகட்டுமா.

குமார் : முதல்ல உன் பிரச்சனை என்னனு சொல்லு.

நான் : எல்லாத்தையும் அவகிட்ட மறச்சிட்டு அவகூட நான் சந்தோசமா வாலமுடியாதுடா.

குமார் : உன் கஷ்டம் எனக்கு புரிது மச்சி.. அவ உன்ன நம்பி வந்திருக்கா, அவளுக்கு இப்போ நீ மட்டும் தான் உலகம் உன்னக்காக காத்துக்கிட்டு இருக்கா. இதுக்கு முன்னாடி நடந்தது எல்லாம் மாறப்போறது இல்ல. திரும்ப வரப்போறதும் இல்ல. ஒரு தத்துவம் சொல்லுறேன் கேட்டுக்கோ ”வாழ்க்கைங்கிறது ஒரு நதியில ஓடுற தண்ணி மாதிரி எப்படி அதன் வழி மாறினாலும் அதுக்கு ஏத்த மாதிரி போய்கிட்டே இருக்கும். அத தடுக்க நினச்சினா ஒருநாள் அது வெள்ளமா எல்லாத்தையும் அழிச்சிடும்.” கல்யாணம் என்பது இரண்டு பேர் வாழ்க்கையில் ஏற்படும் ரகசியமான திருப்பம். பழசெல்லாம் மறந்துட்டு உன் புது வாழ்க்கைய தொடங்கு மச்சி... 

நான் : அட சாமி உன் தத்துவம் தாங்கல... போதும் டா .. ஆழவிடுடா ராசா.. என் நதிய நானே பாத்துக்குறேன் என வீடு திரும்பினேன் ......

குமார் : அடேய்.... என்கிட்ட எல்லாத்தையும் பொலம்புறமாதிரி உன் சம்சாரத்துகிட்டையும் பொலம்பீட்டு இருக்காத டா.... 

என்ன நம்பி ஒரு பொண்ணு வந்துட்டா அவளோட சந்தோசத்துக்காவது இனி நான் வாழனும்.. என் சோக கதை என்னோடவே போகட்டும்...

"வண்ணத்துப்பூச்சி சிறகால் மோதியே
வானமும் இடிந்தால் அதுதான் காதலே" 
Image result for first night bed decoration

முதன் முதலாக ஒரு ஆண்மகனுடன் ஒரே அறையில் உஷா....... நியாயமாக முதலிரவான இன்று உஷாவின் மனதினை வெட்கமும், பதற்றமும், ஒரு விதஅச்சமுமே ஆட்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாகக் குழப்பமும், கவலையும், பயமுமே அவள் மனதில் நிரம்பிக் கிடந்தது.

13 மணிநேரங்களுக்கு முன்பு கழுத்தில் தாலி ஏறிய பெண்ணுக்கு குழப்பமும், கவலையும், பயமும் வேறு எதைப் பற்றி இருந்து விடப் போகிறது..? அவளது மண வாழ்க்கையின் எதிர்காலம் குறித்தே அந்தப் பயம். சந்தோசம் பொங்க வேண்டிய நேரத்தில் அவள் பயம் கொள்ளக் காரணம் தாலி கட்டியதும் தன் கடமை முடிந்துவிட்டது என்ற முகபாவத்துடன் அவளோடு அமர்ந்திருந்த நான்தான் காரணம்.

கட்டிலில் ஒரு பகுதியில் உட்கார்திருந்தாள் உஷா. மறு பகுதியில் நான் உட்கார மொனமாக கட்டிலைப் பார்த்தால்.
   
நான் :"என்ன உஷா. ஏதும் பேசமாட்டேங்குற.. உன்னை எல்லாரும் வாயாடின்னு சொன்னாங்க.." என்று நானே பேச்சை தொடங்கிவைத்தேன்.

உஷா: "நீங்க அமைதியா இருந்திங்க. அதான் நானும் ஏதும் பேசல.."

நான் : "ஒ சாரி.. கொஞ்சம் நெர்வஸா இருந்தது.. அதான்.." 

எனக் கூறி அசடு வழிவதைப்போல் சிரித்து விட்டு மீண்டும் தொடர்ந்தேன்.

நான் :"நாம மேரேஜிக்கு முன்னால பேசிக்கிட்டது இல்ல.. அதனால உன்னபத்தி எனக்குதெரியாது.. என்னைத்தி உனக்குத் தெரியாது.. ஸோ பர்ஸ்ட் என்னைப் பத்தி நான்சொல்றேன்.." கூறிவிட்டு ஏதோ சொற்பொழிவாற்றப் போவதைப் போல்தொண்டையைக் கனைத்துக் கொண்டேன்.. உஷா எந்தவித அசைவுமின்றி கண்ணிமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் ..

எனக்கு என் அம்மா, அப்பா ரெண்டு போரையும் ரொம்ப பிடிக்கும்.. அப்புறம் எனக்கு பிரெண்ட்ஸ் ரொம்ப ஜாஸ்தி.. மேரேஜிலையேபாத்திருப்பியே.. எல்லாரும் ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் பிரெண்ட்ஸ் தான்.. சண்டே ஆனா பிரெண்ட்ஸ் கூட சேந்துட்டு சென்னையை ஒரு ரவுண்டு வந்துடுவேன்.. பார்க், பீச், சினிமான்னு அலப்பறை பண்ணுவோம்... எனக்கு புக்ஸ் படிக்குறதுக்கு ரொம்பபிடிக்கும்.. கல்கி, சுஜாதா, அசோகமித்திரன் எல்லோரையும் படிச்சிடுவேன்..அப்புறம்.." எனக் கூறிவிட்டு உஷாவின் முகத்தைப் பார்த்தேன்..,

"தூக்கம் வருதா..? சாரி.. ரொம்ப மொக்கைப் போட்டேனோ.." என, அவள் "இல்லை"என்று கூறுவாள் என்ற நம்பிக்கையுடன் கேட்டேன். அவளும் என் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாய்..

"ச்சே..ச்சே.. இல்லை" எனப் பொய் சொன்னாள்..

"ஓகே.. என்னைப் பத்தி சொன்னது போதும்னு நினைக்குறேன்.. நீ சொல்லு உஷா உன்னைப் பத்தி, உன் பிரெண்ட்ஸ், பிடிச்ச மூவி, பிடிச்ச ஆக்டர், பிடிச்ச புக்ஸ்எதுவா இருந்தாலும் சொல்லு.." என்றேன்.

நான் கூறியதைப் போல், வீட்டிலும், வெளியிலும் அனைவரிடமும் வாயாடி என்ற பட்டம் பெற்றவள் தான் உஷா.. "காலையிலசாப்டியா" என்று கேட்டால் கூட பத்து பக்கத்திற்குப் பேசுபவள் இன்று வார்த்தைகள் அனைத்தையும் விற்றுவிட்டவள் போல் அமைதியே உருவாகத் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவள் பேசுவாள் என்று சற்று நேரம் காத்திருந்தேன் ஏதும் அவள் பேசாதது கண்டு, நான் சிரித்துக் கொண்டே

"உஷா.. வெக்கப்படாத.. எதாவது பேசு.." என்றேன்..

கண்ணீர் துளிகளை தாங்கிய விழிகளுடன் என்னை நிமிர்ந்து பார்த்தாள்..

"என் மாமா போட்ட கொக்கி" அடுத்த பகுதி தொடரும்.........  

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56[57] [58] [59] [60]


[61] முந்தைய பதிவு || அடுத்த பதிவு [63]


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"நிறுத்தி வைக்க முடியாத காலமும் நின்றுதான் போகிறது மதியோ, மனமோ இழந்தவர்களிடம்."

Image result for love meme tamil

கருத்துரையிடுக Disqus

 
Top