0

Image result for kathal kavithai


"வெற்றியின் பாதை ஆரம்பத்தில் கடினமாக தான் இருக்கும் இறுதியில் மென்மையான பாதையாய் மாறி நமக்கு வெற்றி என்னும் மகிழ்ச்சியை தரும் 😜"


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 62 முதலிரவு ... இன்று முதல் இரவு


"என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா..?" என்றாள். அழுதபடி அவள் அவ்வாறு கேட்டது என்னைக் கொஞ்ச நேரம் திகைக்க வைத்துவிட்டது. உஷா கேட்ட கேள்வியில் எவ்வித தப்பும்மில்லை. அவள் மனசு அப்படிக் கேட்கும் நிலைக்குக் காரணமே  நான்தான்..

ஒரு கொசு சுருளச் சுத்த விடுங்கப்பா..................
Image result for my dream mosquito coil
பிரியாவை பிரிந்து ஒருவருடமான நிலையில் ஒரு நாள் என் மாமா என் வீட்டுக்கு வந்தார் என் அப்பாவிடம் தன் பேச்சைத் தொடர்ந்தார் "செல்வம்.. இப்ப என்ன நடந்திருச்சுன்னு காலம் தள்ளிப்போடுறீங்க நிச்சியம் மட்டும் தானே பண்ணுனோம் இப்படி நடக்கும்னு யாரும் எதிர்பாக்கல பிரபுக்கு வேற வயசு போய்கிட்டு இருக்கு. அவன் மாட்டேனு தான் சொல்லுவான். அவன் சொல்லுறான்னு நம்மளும் அப்படியே விட்டுறதா, பேசாம நம்ம பிரபுக்கு ஒரு பொண்ண பாக்கலாம்.."

அப்பா : "என்ன மச்சான் சொல்றிங்க..இப்ப இருக்குற நிலமைல அவன்கிட்ட எப்படி பேசறதுன்னு தெரில..?"

மாமா :"செல்வம்.. நடந்தது ஒரு விபத்து அத யாரும் எதிர்பாக்கல.. அதுக்காக கல்யாணம் பண்ணி வைக்காம விட்டுடலாமா..?? என்று முடித்தார்

எப்போதும் முடிவு தான் எடுப்பதே என்ற கொள்கையுடன் இருக்கும் என் அப்பா அன்று ஏனோ சற்று யோசிக்க ஆரம்பித்தார். அந்தச் சிறிது நேர யோசனையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த என் மாமா மீண்டும் தொடர்ந்தார்..

மாமா : "ஒன்னும் யோசிக்காத செல்வம்.. மனைவின்னு ஒருத்தி வந்தா பிரபுக்கு ஒரு மாற்றம் வரும் அவனுக்கு எந்த குறையும் தெரியாத அளவுக்கு பாத்துக்குவா..

ஏற்கனவே என் மாமா வாதத்தில் அடங்கிப் போயிருந்த என் அப்பா கடைசியாக அவர் சொன்னதைக் கேட்டு முற்றிலும் அமைதியாகிவிட்டார். சிறிது நேரம் கழித்து பேசத் தொடங்கினார்..,

அப்பா : "சரி மச்சான்.. நீங்க இவ்ளோதூரம் சொல்றிங்க.. பாக்கலாம்." என்றார்..

மாமா : "செல்வம்.. நம்ம ஊர்லையே எனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட பொண்ணு இருக்கு..நல்ல வசதி.. பொண்ணும் நல்லா இருக்கும்.. நீ சரின்னு சொன்னா அந்தபொண்ணயே நம்ம பார்த்திபனுக்கு முடிச்சிடலாம்.. என்ன சொல்ற..?"

அப்பா : "சரி மச்சான்.. ஒரு நல்ல நாள் பாத்து அந்த பொண்ண வந்து பாக்குறோம்.. எல்லாம்சரியா இருந்தா முடிச்சிடலாம்.."

இது அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த என் அம்மாவிற்கு உற்சாகம் தாளவில்லை. தனக்கு மருமகள் வரப் போகிறாள் என்ற சந்தோசம் ஒரு புறம் இருந்தாலும் மனதின் ஒரு மூலையில் "அப்பாடா.. வீட்டு வேளையில் இருந்து இனி விடுதலை.." என்ற சந்தோசமும் சேர்ந்தே இருந்தது.

நான் வீட்டுக்கு வந்ததும் அம்மா என்னிடம் இவை அனைத்தையும் கூறியதும் எனக்கு கோபமே தலைக்கேறியது. ஆத்திரம் அடக்க முடியாமல் அப்பாவிடம் இதைப் பற்றிக் கேட்டும் விட்டேன்..

அப்பா : "ஆமாடா.. உனக்குக் கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்கிறேன்..அதுக்கென்ன இப்ப..?"

நான் : "என்னைக் கேக்காம எப்படி நீங்க முடிவு பண்ணலாம்..?" என்றேன். அவரை என்றும் எதிர்த்துப் பேசாத நான் இன்று அப்படி பேசியதும், அப்பாவின் உதடுகள் கோபத்தில் துடித்தன..

அப்பா : "என்னடா என்னையே எதிர்த்துப் பேசுற.." என்று கையை ஓங்கிக் கொண்டு வந்த அப்பாவை அம்மா தடுத்துக் கொண்டாள்.. "டேய்.. அடுத்த வாரமே அந்த பொண்ண போய் பாக்குறோம்.. எனக்குப்புடிச்சிருந்தா பத்தே நாளில் கல்யாணம்.." எனக் கூறிவிட்டு நகர்ந்தார். நான் பேச்சற்றவனாய் அங்கேயே நின்றிருந்தேன்.

அப்பாவின் வலுக்கட்டயத்தில் என்னையும் மாமா சொன்ன பொண்ண பார்க்க உத்துக்குளி சென்றோம்.

நீலநிற பட்டுப்புடவையில் சிலை போல வந்தால் அனைவருக்கும் தேநீர் கொடுத்துவிட்டு சமையலரைக்கு சென்றுவிட்டால்.. எப்படியாவது பொண்ணுகிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு நெனச்சேன். ஆனால் பார்த்ததும் அம்மா அப்பாவுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

பெண்ணின் அப்பா சுந்தரம் : "தம்பிக்கு வேலை என்ன..?" என்றார் ஒரு குறுகல் பார்வையுடன்.

மாமா : "கம்ப்யூட்டர் எஞ்சினீயரா இருக்காரு சென்னைல.. மாசம் முப்பதாயிரம் சம்பளம்.."என்றார்...

பெண்ணின் அப்பா சுந்தரம் : என் பொண்ணும்தான் டி.எப்.ஐ.ஏ.எஸ்(T.F.I.A.S) பண்ணுனா. என்ன நான் சொன்னது சரிதானே என தன் மகளைப் பார்த்தது கேட்ட அவளோ மந்திரிச்சு விட்டவள் போலதன் தலையை ஆடினால்.
  
பொண்ணும் பையனும் வேணும்னா தனியா பேசட்டும் என் பெண்ணின் அப்பா சுந்தரம் சொல்ல எனக்கு ஒரு மன திருப்பி வருவதற்குள் எங்க அப்பா அது எல்லாம் வேண்டாம் பொண்ண எங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருசுனு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.

வந்த கோபத்தில் அன்று மாலையே நான் சென்னை கிளம்பிவிட்டேன்.............

"T.F.I.A.S அப்படினா என்ன?   " அடுத்த பகுதி தொடரும்.........   

"அதிகம் படிச்சவங்க யாரும் பஸ் எங்க போகுதுனு கேட்டுட்டு ஏற மாட்டாங்க. கன்டக்டர் வந்து டிக்கட் கேட்கும் போதுதான் "பஸ் வேற எங்கயோ போயிட்டு இருக்கு"னு செம்மயா ஏத்து வாங்கிட்டு ரன்னிங்ளயே இறங்கி ஓடுவாங்க. ஏன்னா, நம்மாளுக சேலம்'னு போர்ட போட்டுட்டு திருப்பூர் போயிட்டு இருப்பாங்க..!!"



முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56[57] [58] [59] [60] [61]


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"உங்களுடைய தவறுகளுக்கு மட்டும்தான் நீங்கள் பொறுப்பு.. இந்த உலகத்தில் நடக்கும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை...."

Related image

கருத்துரையிடுக Disqus

 
Top