0
Related image

"எதையும் எதிர்பார்க்காமல், எதிர்பார்க்காத எல்லாவற்றையும் தரும் அட்சயப்பாத்திரமாய் நீ.. அதில் இருக்கும் ஒரு பருக்கையாய் என் நேசம் உணர்வாயா..."

------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 63 என் மாமா போட்ட கொக்கி

அப்பறம் என்ன... பத்தே நாளில் திருமணமென்று ஏற்பாடாகிவிட்டது. என் அம்மா குமாரிடம் பேசி என்னை இந்தத் திருமணத்திற்கு சம்மதம் செய்ய தூது அனுப்பினார். சென்னை வந்ததும் திருமணம் வேண்டாம் என்று புலம்ப குமாரை என் ரூமுக்கு வரச்சொன்னேன். ஆனால் அவன் என்னை இந்தத் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைப்பதில் முடிவாய் இருந்தான். வீட்டில்  பத்திரிக்கை விநியோகிப்பதில் பெண்ணின் அப்பா சுந்தரமும், என் அப்பா செல்வமும் பரபரப்பாக இருந்தனர். திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் நான் ரக்கியாபாளையம் சென்று உஷாவின் அப்பா சுந்தரத்தை சந்தித்தேன். என் வரவை எதிர்பார்க்காத உஷாவின் அப்பா..,

உஷா அப்பா : "என்ன மாப்ள.. திடீர்னு ஒரு போன் கூட பண்ணாம வந்திருக்கீங்க.." என்றார்..

நான் : "சார்.. இந்தக் கல்யாணம் வேண்டாம்.. தயவு செய்து நிறுத்திடுங்க.."

நான் கூறியதைக் கேட்டதும் அவருக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது...

உஷா அப்பா : "மாப்ள.. கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு.. இந்த நேரத்துலவந்து இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறிங்களே.. ஏன் மாப்ள.. என்னாச்சிசொல்லுங்க..."

நான் : "சார்.. இப்ப வந்து இப்படி சொல்றதுக்கு என்னை மன்னிச்சிடுங்க...ஆனா எனக்கு வேற வழி இல்ல.. என் சிச்சுவேசன் அந்த மாதிரி"

உஷா அப்பா : "இப்படி சொன்ன எப்படி மாப்ள.. என்ன காரணம்னு சொல்லுங்க.. என் மேல ஏதும்தப்பு இருக்கா..?"

நான் : "சார்.. உங்க மேல ஒரு தப்பும் இல்ல.. தப்பெல்லாம் என் என்மேல்தான்.. என் அப்பா வற்புறுத்துனாருனு தான் நான் அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தேன்.. எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல.."

உஷா அப்பா : "விருப்பம் இல்லன்னு பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்லிருந்தா இவ்ளோ தூரம்பிரச்னை வந்திருக்காதுல.."

நான் : "சார்.. புரிஞ்சிகோங்க.. என்னோட சேலரி வெறும் முப்பதாயிரம்தான்.. இந்தசேலரி வச்சிட்டு சென்னைல குடும்பம் நடத்துரதெல்லாம் ரொம்ப கஷ்டம் சார்.. பின்னாடி உங்க பொண்ணு தான் ரொம்ப கஷ்டப்படும்.. அதான் சொல்றேன்..கல்யாணத்தை நிறுத்திடுங்க..." என் ஒரு சப்ப சாக்க சொன்னேன்.

உஷா அப்பா : "தம்பி.. சிட்டி மாதிரி இல்ல இங்க.. கல்யாணம் நிச்சயமாகி அது நின்னு போனா என்பொண்ண யாரு தம்பி கட்டிக்க வருவாங்க... ஊருக்குள்ள என் பொண்ணுக்கு தான் ஏதோ குறைன்னு பேசிக்குவாங்க.. சொந்தக்காரங்க முன்னாடி எந்த மூஞ்சவச்சிக்கிட்டு போய் நிப்போம்.." எனக் கூறிவிட்டு கண்கலங்கினார் சுந்தரம்..

கல்யாணம் நின்றால் அதனால் அந்தப் பெண்ணுக்கு நிகழும் விளைவுகளை சுந்தரம்கூறக் கேட்டதும் கல்யாணத்தை நிறுத்த நான் கூறிய காரணங்கள் உப்புசப்பிலாததாக எனக்கே தோன்றியது.

அமைதியாக அவர் அருகே சென்றுகைகளை ஆதரவாய் பற்றியவாறு..,

நான் : "சார்.. அழாதிங்க.. நீங்கக் கல்யாண வேலைகளைப் போய் பாருங்க..." எனக்கூறிவிட்டு வந்துவிட்டேன்..

இவை அத்தனையும் தெரிய வந்ததும் உஷா நொறுங்கிப் போய்விட்டாள். என்னை முதல் முறையாகப் பார்த்த போதே பிடித்துப் போய்விட்டது. எனது கம்பீரமும், வெளிப்படையாக நான் அன்று பேசியதும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லையென்று தெரிந்ததும் கலங்கி விட்டாள்.

ஒரு வழியாக திருமணம் நடந்தேறியது. ஆனால் உஷாவிற்கு தன் எதிர்காலம் குறித்த பீதி அவள் மனதை குடைந்து கொண்டே இருந்தது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர், நண்பர்களுடன் சிரித்தபடியே புகைப்படம் எடுத்துக்கொண்டாளே தவிர மனம் முதலிரவின் தனிமையில் என்னிடம் கேட்பதற்குசில கேள்விகளை ஒத்திகை பார்த்துக் கொண்டே இருந்தால்.

"என்னை பிடிச்சிருக்கா.. பிடிக்கலையா..?"

"பிடிக்கலைனா பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்லியிருக்கலாம்ல.."

"கல்யாணம்னா விளையாட்டாப் போச்சா உங்களுக்கு.. வேணும்னா நடத்துறதுக்கும்.. வேணாம்னா நிறுத்துறதுக்கும்.."

இந்த ஒத்திகையின் முதல் கேள்வியைத் தான் கேட்டுவிட்டு அழத் தொடங்கிருந்தாள் உஷா..

நான் : "ஏய் உஷா.. ஏன் அழுற..?"

உஷா : "சொல்லுங்க.. என்னைப் பிடிச்சிருக்கா.. பிடிக்கலையா...?"

நான் : "பிடிக்காமலா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. பிடிக்காமலா உன்னோடபேசிட்டு இருக்கேன்.."

உஷா : "அப்புறம் ஏன் அப்பாக்கிட்ட கல்யாணத்த நிறுத்த சொல்லி சொன்னீங்க.."

நான் : "ஐயோ அது வேற உஷா.. என்னோட சேலரி வெறும் முப்பதாயிரம் தான்.. அத வச்சிட்டு எப்படி பாமிலி ரன் பண்ண முடியும்.. இப்படி இருக்கும் போது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு  குழந்தை பெத்துக்கிட்டா என்ன ஆகிறது.. அதனால தான் மாமாக்கிட்ட அப்படிச் சொன்னேன்.. மத்தபடி உன்னை பிடிக்காம இல்ல.." என்று சமாதானம் செய்தேன்.

என் சமாதான பேச்சில் தன் அழுகையில் பாதியை கரைத்திருந்த உஷா..,

உஷா : "நிஜமா..?" என்றாள்..

நான் : "நிஜமா தான்.. கல்யாணம் பண்ண பிடிக்கலன்னா பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்ல வேண்டியது தானேன்னு மாமா கேட்டாரு.. அதுக்கு ரீசன் அவர்ட்ட சொல்லல.. ஆனா உன்கிட்ட சொல்றேன்.." எனக் கூறிவிட்டு உஷாவை நெருங்கிவந்தேன். அவளின் சுவாசத்தின் சூட்டினை உணரும் அளவிற்கு அவளை நெருங்கிய பின் தொடர்ந்தேன்..,

"அன்னைக்கு உன்ன பாத்ததுமே நான் ப்ளாட்.. ரொம்ப பிடிச்சி போச்சி.. இவ்ளோ அழகான பொண்ணு எனக்கு பொண்டாட்டியானு நினைச்சேன்.. அந்த நினைப்பிலையே கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லன்னு சொல்ல முடியல..கல்யாணத்துல தான் எனக்கு விருப்பமில்லைனு மாமாகிட்ட சொன்னேன்.. உன்மேல இல்ல.."

எனது இந்த வார்த்தைகளைக் கேட்டதும் உஷாவின் முகம் பனி விலகிய பாதை போல், இருள் விலகிய மேகம் போல் பிரகாசமானது. மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்ற உஷா என்னை இறுக அணைத்துக் கொண்டாள்.

நான் : "உஷா.." என்று அவள் காதோடு மெதுவாக அழைத்தேன்..

உஷா : "ஹ்ம்ம்."

நான் : "ஐ லவ் யு..!"

உஷா : "நானும் ஐ லவ் யு.." எனக் கூறி விட்டு வெட்கத்தில் என் நெஞ்சில் முகம்புதைத்தாள் உஷா..

என் கரங்களை கோர்த்து உஷாவை இறுக அணைத்தேன். அந்த அணைப்பில் உஷா தன் எதிர்காலம் குறித்து எழுப்பியிருந்த சந்தேகக் கோட்டை சுக்குச் சுக்காக நொறுங்கிப் போனது..

நான் : என் மனதில் ஒரு சந்தேகம் திடிர்னு வந்தது, உன்ன பொண்ணு பாகவந்தாபோ உங்க அப்பா என் பொண்ணு டி.எப்.ஐ.ஏ.எஸ்(T.F.I.A.S) பண்ணியிருக்கானு சொன்னாரு அது என்ன கோர்ஸ் எனக்கு தெரியல.

உஷா : அது வந்து.. அது வந்து..

நான் : என்ன வந்து போயினு

உஷா : அது.. அத சொன்னா நீங்க கோவபடகூடாது..

நான் : சரி நான் கோவபடல என்னன்னு சொல்லு

உஷா : அது வந்து.. டுவழ்த் பெயில் இன் ஆல் சப்ஜெக்ட். (Twelfth Fail In All Subjects) 

என் மனதுக்குள் “அடிப்பாவி மக்குபீசா நீ.. இதுக்கு தான் உங்க அப்பன் இவ்ளோ பெரிய பில்டப் கொடுத்தானா, எல்லாம் முடுஞ்சுது ஒன்னும் பண்ணமுடியாது”..  


"அது என்ன டேட்டோ  ?   " அடுத்த பகுதி தொடரும்.........   



முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56[57] [58] [59] [60] [61] [62]


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யாரை எங்கு வைத்திருக்க வேண்டும் என்பது காயம்பட்ட பின்னே புத்திக்கு எட்டுகிறது.. மனமோ தெளிவதே இல்லை!! 😏😏

கருத்துரையிடுக Disqus

 
Top