0
"இதயத்தை பூட்டிட்ட உனக்கு ஏனோ உந்தன் விழிகளை பூட்ட மறந்திட்டாய்"
-------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 65 அது என்ன டேட்டோ ?

அன்று இரவு கட்டலில் நான் படுத்துக்கொண்டு ரொமாண்டிக் விடியோக்களை பார்த்துக்கொண்டிருந்தேன். கதவைச் சாத்தி விட்டு வந்து கட்டிலோரம் சுவரை பார்த்தபடி படுத்தல் உஷா.

மெல்ல அவள் பக்கம் உருண்டு சென்று மெதுவாக அவள் பின்னிருந்து அணைக்க அவள் என் கைகளை விளக்கினால். மீண்டும் நான் முயற்றி செய்தும் பலனில்லை. 

நான் : வந்த கோபத்தில் கொஞ்சம் சத்தமாக”ஏன்.. ஏன் தள்ளி விடுற.”

உஷா : இப்ப வேண்டாம்.

நான் :”ஏ.. ஏ வேண்டா.”

உஷா : மூணு நாளைக்கு வேண்டாம்.

நான் : அது என்ன மூணு நாள் கணக்கு.

உஷா : பொதுவா பெண்களுக்கு வர்ற பிரச்சனைதான்.. கொஞ்சம் புருஞ்சுக்குங்க.

நான் : சரி சரி ..

என் மனதுக்குள் ”சே... இன்னிக்காவது அது என்ன பேர்னு பாகலானு பாத்தா மூணு நாள் தள்ளி போடுறாளே” அன்று இரவு பலமுறை விழித்தேன். ஒவ்வொரு முறையும் எனக்குள் இருக்கும் குழப்பம் அதிகமானது.

அடுத்த நான் காலை நல்ல தூங்கிட்டேன்.. கைப்பேசி சிணுங்கியது.. பார்த்தால் மறு முனையில் அம்மா

நான் : ஒரு கொட்டாவி விட்டுட்டு “ஹலோ.. குட் மார்னிங் அம்மா”

அம்மா : அங்க ஏனடா நடக்குது.

நான் : இங்க என்னேன்னமோ நடக்குது. நீங்க எத கேக்குறீங்க.

அம்மா : வாய மூடு பிரபு, உஷா காலைல போன் பண்ணுனா.. எண்டா இப்படி நடந்துக்குற.

நான் : என்ன நடந்துச்சு இங்க. ஏன் காலைல கால் பண்ணிக் கத்திக்கிட்டு இருக்குறீங்க.

அம்மா : நீ பண்ணுனது எல்லாம் அவ என்கிட்ட அழுதுட்டே சொல்லும்போது எனக்கு எவ்ளவு அசிங்கமா இருந்ததுன்னு உனக்குத் தெரியுமா. 

நான் : இல்ல மா அவ.. மூணு நாள் வேண்டாம்னா அதுதான்..

அம்மா : இந்த வாரம் வீட்டுக்கு வா உன்கிட்ட நெறையா பேசணும். 

நான் : சரி... மா..

அம்மா : கண்டிப்பா வாடா..

உஷா குளியலரையிளிருந்து வெளியே வந்தால் அவளைப் பார்த்ததும்

நான் : சரி மா.. வர்றேன்... வை... என் அழைப்பைத் துண்டித்தேன்.

என்ன அம்மாகிட்டையா மாட்டி விடுற என முறைத்தபடி ஆப்பிஸ் சென்றுவிட்டேன். 

சரி, இனிமேல் இதுதான் வாழ்க்கை எனக் கண்ணீர் துடைத்துவிட்டு வீட்டைச் சரி செய்தாள் உஷா.

இரண்டு நாட்கள் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை....

இரண்டு நாட்களாக உஷா சோகமாக இருந்ததை பார்த்துக்கொண்டு என்னால சும்மா இருக்க முடியவில்லை இதற்கு ஒரு முடிவுவெடுக்க யோசித்தேன்..

மறுநாள் காலை நான் ஆபீஸ் கிளம்பியதும் உஷா டிரெஸ்ஸிங் டேபிளில் எதோ தேடிக்கொண்டிருந்தால். அப்போது ஒரு பெண்ணின் புகைப்படம் சேர்த்து ஒரு கடிதம் இருந்தது. அதில்....

"மொதல்ல நான் உங்கிட்ட அப்போ அப்படி நடந்ததுக்கு என்ன மன்னுசிடு. இந்த போட்டோல இருக்குறது பிரியா. நாங்க ரெண்டுபேரும் லவ் பண்ணுனோம் சில காரனத்தால நாங்க ஒன்னா சேர முடியல. 

இத ஏன் இப்ப உங்கிட்ட சொல்லுறேன்னு நினைக்கிரியா. நம்ம முதலிரவுல உன் நெஞ்சுல யாரோ ஒரு பையன் பெயர டேடோவா குத்தியிருந்த நான் பாத்தேன். அங்க ஒரு பையனோட பேர டேடுவா குத்தியிருக்கிரினா கண்டிப்பா அது உன் காதலனோட பேராதான் இருக்கும். என்ன மாதிரியே உனக்கும் யாரோ லவர் இருப்பாங்களோனு நெனச்சு அந்த பேரு என்னனு பாத்து உன் லவர்ரோட சேர்த்து வைக்கத்தான் முயற்சி பண்ணுனேன். அனா எல்லாமே தப்பா போய்டுச்சு இப்பவும் ஒன்னும் இல்ல நீ எப்ப வேணுனாலும் உன் காதலன தேடி போலாம். 
~இப்படிக்கு பிரபு.

"தீர்வு கொடுத்த உஷா !!!! அடுத்த பகுதி தொடரும்.........    

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56[57] [58] [59] [60] [61] [62] [63] [64]

[65] முந்தைய பதிவு || அடுத்த பதிவு [67]

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"செல்வங்கள் எல்லாம் பெண்களாவே இருக்கட்டும் வரம் தரும் நீ மட்டும் அழகியாய் இரு எனக்கு"
 

கருத்துரையிடுக Disqus

 
Top