0

"நமக்கு பிடிச்ச மாதிரி கல்யாணம் நடக்குதோ இல்லையோ அம்மா, அப்பாக்கு பிடிச்ச மாதிரி நடக்கும்"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 67 தீர்வு கொடுத்த உஷா !!!!


விடியற்காலை 3 மணி… மழை வேறு பெய்து கொண்டிருந்தது. நானும் உஷாவும் நல்லா தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது நான் மட்டும் எழுந்து போனேன், கதவைத் திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.

அந்நியன் : “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்தக் குடிகாரர் கேட்டார்.

நான் : “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்குத் தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டேன்
.
உஷா : தூக்கத்தில் என்ன பார்த்து “யாருங்க அது?”
.
நான் : “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”

உஷா : “நீங்க போனிங்களா?”

நான் : “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?”

உஷா : “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள்.

நான் : எந்திரித்து, ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டேன். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”

அந்நியன் : “ஆமா சார்”

நான் : “ஏதோ தள்ளி விடணும்னு சொன்னீங்களே, இப்ப தள்ளலாமா?”

அந்நியன் : “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”

நான்: “எங்கே இருக்கீங்க?

அந்நியன் : “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....”

நான் : அட குடிகார லூசுப் பயலே....

அந்நியன் : ஹா ஹா ஹா... 

கதைல எப்ப பாரு கருத்த மட்டுமே எதிர்பாக்காதீங்க லைஃப எஞ்ஜாய் பண்ணுங்க! :))))))

" புருஷன் vs பொண்டாட்டி   !!!! அடுத்த பகுதி தொடரும்.........    

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56[57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66]

[67] முந்தைய பதிவு || அடுத்த பதிவு [69]

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"என் ஆதியாய் அங்கமாய் என்னுள் பாதியாய் மீதமாய்.... உன் ஊமையாய் உறவாய் உன்னுள் உயிராய் உணர்வாய்.... இணையாய் இணைந்தோம் இனி ஈருடல் ஓருயிராய் ஒளிர்வோம்❣️"

கருத்துரையிடுக Disqus

 
Top