0


“எது நமதோ அது வந்தே தீரும் யாராலும் தடுக்கமுடியாது நமதில்லாதது நமக்கில்லாதது எது செய்தாலும் வராது யாராலும் தடுக்கவும் முடியாது வாழும் வரை வாழ்க்கை!” 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 68 நடுஇரவில் கேட்ட உதவி

நல்ல சாப்பிடுங்க மாப்ள.. கூச்சப்படாம சப்புடுங்கனு சொல்லிச் சொல்லி நல்ல ஸ்லிம்மா இருந்த நான் விருந்து மேல விருந்தா வந்து நல்ல வெய்ட்டும் போட்டுட்டேன். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்ன்னு சும்மாவா சொன்னாங்க, மெதுவா மெதுவா ஆரம்(?)பிச்சுது எங்க ரெண்டு பேருக்கிடையில் ரெஸ்லிங்..................... ப்ருஷன் vs பொண்டாட்டி.   

சில மாதம் ஓடின.. ஒரு காலை நேரம் ......

“நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே.....
நாணங்கள் என் கண்ணிலே.......
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ”......

டிவியில் இசைக்கு தன் தலையை ஆட்டிக் கொண்டிருந்தால் உஷா..

பெட் ரூமிலிருந்து வந்த நான் மணியைப் பார்க்க பத்தாகி விட்டது.... எனக்கு வந்த கோபத்தில்..  

நான் : ஏய் உஷா மணி பத்து ஆச்சு ஏன் என்ன எழுப்புல. 

உஷா : நான் எழுப்புனே.. நீங்க தான் எழுந்தரிக்கள .

நான் : எழுந்தரிக்கலையா... மாடு கத்துனா கூட எந்திரிக்க மாட்டேன்.. நீ கத்துனா எப்படி டீ எழுந்தரிக்காம இருப்பேன்.

உஷா : அவ்வளவு அக்கறை இருந்தா அலாரம் வச்சுட்டு தூங்க வேண்டியதுதானே. நீங்க பொறுப்பு இல்லாம பருப்பு மூட்ட மாதிரி தூங்கிட்டு என்ன வந்து சொல்லாதீங்க..

நான் : என்னது.. பருப்பு மூட்டையா.. ஏய் ஏதாவது எடுத்து அடுச்செனு வச்சுக்கவே.. ஏண்டி இப்படி எல்லாம் பண்ணுற... மணி பத்து ஆச்சு ஆபிஸ்ல எனக்கு ஒரு கிளைன்ட் மீட்டிங் இருக்குனு நேத்துதானே உன்கிட்ட சொன்னேன்.. கொஞ்சம் கூட சீரியஸ்நச புருஞ்சுக்க மாட்டிங்கிரையே. உன்ன நான் கல்யாணம் பண்ணுனேன் பாரு என்ன செறுப்பால அடிச்சுக்கணும். 

உஷா : மெதுவாக முனுமுனுத்தாள் “ஆமா ஆமா உங்கள எனக்குக் கல்யாணம் பண்ணிக்குடுத்ததுக்கு என்ன தொடப்பத்தால அடுச்சுக்கணும்”. 

நான் : வேகவேகமாக பிரஷில் பேஸ்டை போட்டு பல்லை துலக்கிக்கொண்டு கண்ணாடியை பார்த்தவாறே “எதோ அம்மா அப்பா பாத்த பொண்ணு, அழகான பொண்ணுன்னு நெனச்சு கல்யாணம் பண்ணுனா என்ன திமிரா பேசுறா”..

உஷா : ம்ம்.. எதோ உங்க அம்மா அப்பா நல்லவங்களா இருந்ததுனாலதான் உங்ககூட இருக்குறேன் இல்லன எப்பவோ எங்க அம்மா வீட்டுக்குப் போயிருப்பேன். 

நான் : கொஞ்ச நாள் பொறு ஒருநாள் டைவர்ஸ் பேப்பர உன் மூஞ்சில வீசுறேன்.. அழகா இருக்காங்குற திமிறு.... கோவத்தின் உச்சத்தில் கத்தினேன்.

உஷா : குடுத்துருடா சாமி நான் போய்டே இருப்பேன்.

நான் : என்னது.. டாவ.. போடி தக்காளி.

உஷா : போடா பருப்பு மூட்ட.. 

சண்டை உச்சம் பெற, அதே கோபத்துடன் நான் ஆபீஸ் கிளம்பினேன். 

இன்னிக்கு நாளே செறியில்ல.. ஆபிஸ்ல தான் டார்ச்சர்னா இப்ப விட்டிலுமானு நெனச்சுட்டு என் பைக்க எடுத்து ரோட்டை கவனிக்காமல் திருப்புனா எதிர்ல ஒரு கருப்பு ஆடி கார் சடன் பிரேக் போட்டு நின்னுச்சு. ஜஸ்ட் மிஸ்ல எஸ்கேப்.. எனக்குப் படபடப்பு அதிகரித்தது... அதுக்குள்ள அடுத்த பஞ்சாயத்தா.. 

கருக்குள்ள இருந்தவன் : நீ வந்து சாக என் வண்டிதான் கெடச்சுதாடா ... 

" ஏக்சன் பில்லா ரோமியோ ரகு  !!!! அடுத்த பகுதி தொடரும்.........    

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56[57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67]

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“நமது தேவைகளை காலத்திற்கேற்ப பிறரறிந்தோ, அறியாமலோ நமக்கு உதவிடும் பொழுது, மனம் நிறைந்து நன்றியுணர்வு தானாக வெளிப்பட்டுவிடுகிறது!!”

கருத்துரையிடுக Disqus

 
Top