0

உசியின்றி நூலுமின்றி விழிப்பார்வை ஒன்றிலே கோர்த்துக்கொண்டாது அவளிதயம் என்னிதயத்திலே..💗
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 69 புருஷன் vs பொண்டாட்டி

இன்னைக்கு நாளே செறியில்ல.. ஆபிஸ்ல தான் டார்ச்சர்னா இப்ப விட்டிலுமானு நெனச்சுட்டு என் பைக்க எடுத்து ரோட்டை கவனிக்காமல் திருப்புனா எதிர்ல ஒரு கருப்பு ஆடி கார் சடன் பிரேக் போட்டு நின்னுச்சு. ஜஸ்ட் மிஸ்ல எஸ்கேப்.. எனக்குப் படபடப்பு அதிகரித்தது... அதுக்குள்ள அடுத்த பஞ்சாயத்தா..

Image result for audi black india interior

காருக்குள்ள இருந்தவன் : தன் தலையை வெளியே எட்டிப் பார்த்தவாறு “நீ வந்து உலுக என் வண்டிதான் கெடச்சுதாடா”...

சரி தப்பு நம்ம மேலதான் ஒரு சாரி சொல்லிடலாம் என அந்த கார் அருகே சென்றேன். ஒரே ஆச்சரியம் அது ரகுமாமா பல வருடங்லுக்கு பிறகு நான் ரகு மாமாவைப் பார்த்தேன் 

நான் : என்ன மாமா என்ன அடையாளம் தெரியலையா 

ரகுமாமா : கொஞ்சம் கோபம் தனித்து “ யார்னு தெரியலையே

நான் : மாமா நான் தான் பிரபு..

ரகுமாமா : டேய் படவா நீயா….. பாத்து ரொம்ப நாள் ஆச்சுல அதுதான் ஞாபகம் வர்ல.. நீ எப்படி இருக்குற.

நான் : எதோ இருக்குறேன் மாமா.

ரகுமாமா : ஏதோனு ஏன் இழுக்குற... சரிவா ஒரு காப்பி குட்டுச்சுட்டே பேசலாம். 

பக்கத்திலிருந்த ஒரு காப்பிடேவிற்கு சென்றோம்.. 

ரகுமாமா : சரி உன் வாழ்கையில் அப்படி என்னதான்டா நடந்துச்சு.

நான் : எந்த வாழ்க்கையை மாமா நான் சொல்லுறது. நீங்க நம்ம ஊர்ல இருந்து போனதுக்கு அப்புறம் கொஞ்ச வருசத்துல நாங்களும் கோயம்பத்தூர் வந்துட்டோம் அப்போ தொடங்குச்சு.... 

நினைவு சுருள் சுத்த..... கோயம்பத்தூருக்கு ஜூம் இன் ஆனது... நீல நிற சுடிதாரில், தொடக்கி "SAY SOMETHING!" வழியாகப் பயணித்து, லண்டலில் சடுகுடு முடித்து, கோயம்புத்தூர் கல்யாணம், நான் பருப்பு மூட்டை ஆனது வரைக்கும் என் கதை முழுவதையும் சொனேன்.

ரகு மாமா : ம்ம் வாழ்க்கையில் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். ரகுவின் ஐபோன் அடிக்க” நான் அங்கதான் வரேன் கொஞ்சம் வெயிட் பண்ணு என அழைப்பைத் துண்டித்து விட்டு” ஒரு அவசர வேலை இருக்கு நான் இப்போ கிளம்பனும்.. நாளைக்கு நான் உன் வீட்டுக்கு வர்றேன் ஒரு முக்கியமான விசியம் இருக்கு அப்படியே உனக்கும் ஒரு தீர்வும் சொல்லுறேன் என சொல்லிவிட்டு கிளம்பினார்.  

அடுத்த நாள் என் வீட்டுக்கு வந்தார் 

ரகு மாமா : எனக்குக் கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்குது டா..  இப்பதான் ஒரு பொண்ணு ஓகே சொல்லுச்சு.

நான் : மாமா கலக்குறீங்க போங்க... பொண்ணு எந்த ஊரு..

ரகு மாமா : நம்ம ஊர் பக்கம் தான்.. அவ பேரு ஹேமா.. 

நான் : என்னது ஹேமா.... வா.........என் மைன்ட் வாய்சில் ”ஒருவேள அவளா இருக்குமோ”       

" ரகுவின் ரோமியோ ஐடியா  !!!! அடுத்த பகுதி தொடரும்.........    
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"சத்தமின்றி கொடுத்து விட்டுச்செல்🙈🙈 நான் கொடுத்த முத்தங்களை😘😘"

கருத்துரையிடுக Disqus

 
Top