0


“அவங்க வந்து பேசட்டும்னு நாம நினைப்போம்.. நாம போய் பேசவேண்டுமென்று அவங்க நினைப்பாங்க.. இதனாலேயே.. சிலரது நட்பும், அன்பும் நிலைப்பதில்லை.”
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பகுதி 

உஷா : சிறிது இருமியவாறு “கால எடு கூட்டனும்”

ரகு மாமா சொன்னதை நினைத்தது பார்த்துக் கொண்டே நான் என் ஓரக்கண்னால் உஷாவை ஒரு காதல் பார்வை விட்டேன். பொண்ணுங்க நேரா பாத்தாலே அவங்களுக்கு பினாடி என்ன நடக்குதுன்னு சொல்லிடுவாங்க. வீட்டிலேயே இருக்குற ஒரு ஆழப் பாக்க சொல்லவாவேனும். நான் பார்ப்பதை சுதாரித்தவள் என்னைப் பார்க்க என் பார்வையை மாற்றினேன். சமையலறை சென்றவளை பின்தொடர்ந்தேன் என்னை ஓரக்கன்னல் பார்த்தவாறே பாத்திரங்களை கழுவினால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

உஷா : என்ன வேணும்.

நான் : ஒன்னும் இல்ல 

உஷா சிறிது முறைத்தவாறு தன் வேலைகளைத் தொடர்ந்தால். நான் சும்மா நிக்க கூடாதுன்னு காப்பி போடலாம்னு ஒரு பாட்டு “உன் சமையலறையில் நான் உப்ப சக்கரையா” முணுமுணுத்தவாறு உஷாவை ஓரக்கண்னாலும் பார்த்துக்கொண்டு காப்பி பாத்தித்தில் பாலை ஊற்றிக் கொதிக்க வைத்தவாறு காப்பி தூளையும் பக்கத்திலிருந்த டப்பாவில் சக்கரையை மூணு ஸ்பூன் போட்டதும் உஷாவின் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.. நான் சுயநலமாக ஒரு கப் காபிதான் போட்டேன் அவள் சந்தோசத்தை நம்ம ஏன் கெடுக்கணும்னு நினைத்தவாறு அடுத்த பாட்டுக்கு தாவினேன் 

“ஒரு பாதி கதவு நீயடி, மறு பாதி கதவு நானடி..
பார்த்துக் கொண்டே திறந்திருந்தோம்..
சேர்த்து வைக்கக் காத்திருந்தோம்..”

இரண்டு கப்பில் சரிபாதியாக ஊத்த.. 

உஷா : ராசா என்ன ஆளை விடுங்க. என ஹாலுக்கு ஓடினால்.

நான் : சரி நான் போட்ட காப்பியக் குடிக்க உனக்கு கொடுத்துவைக்கள ம்ம் சரி நம்மலே ரசுச்சு ருசுச்சு குடிக்கலாம்.. சிஎஸ் டானு சொல்லிக்கொண்டு வாயில் வைக்க உஷா கிச்சனுக்குள் வர என் நாக்கில் காப்பி பட.. அட கண்றாவியே சக்கரைக்கு பதிலா உப்ப கொட்டிட்டேனா.. இத உஷா குடுச்சிருந்தா கண்டிப்பா டைவேர்ஸ் தான். என்ன பண்ணுறது உஷாவேற என் முன்னாடி நிக்குறா எப்படியாவது சமாளிக்கணும் என் நாக்கை இரும்பாக்கி ஒரு மொடக்கு குடிக்கும்போது என்னையும் மீறி அது ரிவெஞ் எடுத்துருச்சு. 

உஷாவின் புன்முறுவல் சிரிப்பாக மாறியது. மெதுவாக என் பக்கம் வந்தால். 

உஷா : என்னங்க சக்கர கம்மியா இருக்கா..

நான் : !!!!!!!

சரி ஒருவழியா என்கிட்ட பெசவர்ரனு நான் பேச்சை தொடங்கும்முன் கைபேசி சினுங்கிகத்து.. குமாரின் அழைப்பு.. என் முகம் சுருங்க.. அந்த அழைப்பு யார் என்று உஷா உணர அவள் முகம் சிவக்க..   

உஷா : போங்க உங்க பிரண்டையே கட்டிட்டு அழுங்க..  

என் மனதுக்குள் “நான் ரோமன்ஸ பண்ணற நேரம் எப்படித்தான் இவன் கண்டுபிடிக்கிரானு தெரியலையே”..  

நான் : இப்ப உனக்கு என்ன தான் வேணு...

குமார் : சூட ஒரு கப் காப்பி வேணும்.

நான் : நானே அடுப்பு மேல இருக்குற கடுப்புல இருக்குறேன் நீ வேற. இங்கவா நானே உனக்குப் பேஷல் காப்பி போட்டு தரேன்.

குமார் : அந்த உப்பு காப்பிய நீ மட்டும்தான்டா குடிப்ப..

நான் : இங்க நான் போட்ட காப்பி அவனுக்கு எப்படி தெரியுது. ம்ம்.. சரி நான் அங்க வர்றேன்.  

குமார் : இங்க வேண்டாம்... எங்க வீட்டுல காப்பித்தூள் இல்ல.. நம்ம எப்பவும் சந்திக்கும் டீகடைக்கு வா.

நான் : உனக்கு வேற வேலையே இல்லையா, உங்க வீட்டுல காப்பி தூள் இல்லனா என்ன எதுக்குடா இம்ச படுத்துற.

குமார் : என் நிலைமை தெரியாம பேசாத.. சொன்ன புருஞ்சுக்கோடா..

நான் : சரி வரேன் ..வை... ஒருவேள அவனும் உப்பு காப்பி போட்டுடானோ..

" இந்த போடோல இருக்குறது யாரு  !!!! அடுத்த பகுதி தொடரும்.........    

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


*வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட...!!!* *நிகழ்காலத்தை பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும்...!!!*

கருத்துரையிடுக Disqus

 
Top