0

"காதல் என்பது காத்திருந்து அவன் வருகைக்காக .. தன்னை அவனிடம் முன்னிலைப்படுத்தி அன்பால் லயித்து அணைத்துக் கொள்வது .."
--------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 72 சூட ஒரு கப் காப்பி

உஷா வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினால் ஒரு  பழைய அட்டைப் பெட்டி அவள் பார்வையில் பட அதை எடுத்துப் பிரிக்க தொடங்கினால்....

வருடம்:1997, கோழி கிருக்கெளுத்தில் முதல் பக்கம், டிங்குவின் டைரி, பெயர் படித்ததும் அவள் கண்கள் விரிய, கைகள் நடுங்க... கை தவறி டைரி கீழ விழ, சிதறின சில காகிதங்கள், ஒரு புகைப்படமும் இருந்தது. 

நான் வைத்திருந்த புகைப்படத்தின் பின் புறம், பப்பு உன்னை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன் என்று எழுதியிருந்தேன்.. வீட்டின் காலிங்பெல்.. வேற யாரா இருக்கும்......... அது நான் தான்.. விரக்தியில் வந்து நின்ற என்னை மலர்ச்சியுடன் வரவேற்றாள், அவன் கண்ணில் ஒரு கேள்வி, சிறு ஆச்சர்யம்.

உஷா : இது யாரு என பப்புவின் சிறு வயது புகைப்படத்தை என்னை நோக்கே நீட்ட எனக்கு தூக்கிவாரிப் போட்டது.. அந்த டைரிய முழுசா படுச்சுடாலோனு.    

நான் : என் குரல் நடுங்க... அது வந்து.. இது எங்க இருந்தது... என பதட்டத்துடன் கேட்க   

உஷா ஒரு கடிதத்தை என்னை நோக்கி நீட்டினாள்... 

" பப்புவின் காதல் கடிதம்  !!!! அடுத்த பகுதி தொடரும்.........    

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெண் வீட்டார் "அடக்கமான பொண்ணு" என்பதும்.. மாப்பிள்ளை வீட்டார் "தங்கமான பையன்" என்பதும்.. அடித்துவிடும் பொய்களில் இரண்டு..!!

கருத்துரையிடுக Disqus

 
Top