உன் எதிரில் நிற்க பயந்து உருகி மருகி ஆவியாகிறது பனி கூட எங்கே துணிந்து நிற்க போகிறது என் சோம்பேறிதனம் மலராக மலர்கிறேன் நானும் உன் வரவினால் தினம் தினம் புதுபொலிவுடன்
--------------------------------------------------------------------------------------------------------------------------
பப்பு தன் டிங்குக்கு எழுதும் காதல் கடிதம்
உன் பப்புவின் கிறுக்கல் உனக்காக மட்டும்….
அன்புள்ள என் கணவா... ஆசையுடைய என் காதலா.... பாசமுள்ள டிங்கு... உன்னைப் பற்றி எழுதத் தொடங்கியதும், இந்தப் பேனா நீல மை எனக்கு நினைவு படுத்தியது, நீல சட்டையுடன் நீ இருந்த புகைப்படம், எனக்குள் முதன் முதலாக ஏற்படுத்திய சிலிர்ப்பு இப்போதும் வந்தது.
உன்னைப் பற்றி பல படித்ததால் தான் இந்தத் தடுமாற்றமோ?? உன்னுடன் பழகிய சில நாட்களில் வந்து வந்து போகும் நீ என்னவன் தான் என்று..
அன்று அவனாய் இருந்த நீ இன்று அவாராய் எனக்குள் மாறிவிட்டாய் உன்னைப் பார்த்த முதல் நாள் பசுமரத்தாணியாக உள்ளது என் மனதில்...
எனக்கு உன்னைக் கண்டவுடன் காதல் இல்லை, என்றாலும் ஏதோ ஒரு சலனம் என்பது உண்மைதான். மேகம் மறைக்கும் முழுநிலவு போல என்னையே ஏமாற்றி என் மனதை மறைக்க முற்பட்ட நாட்கள் பல...
வளைக்க வளைக்க வீறுக் கொண்டெழும் மூங்கிலைப் போல நாளுக்கு நாள் விஸ்வரூபமாய் வளர்ந்து கொண்டே போகிறது உன்மேலான என் காதல். குரங்காய் மனம் மாறி மறைக்கவோ, ஒதுக்கவோ முற்பட்டாலும், விடவில்லை உன் மீதான என் பொல்லாக் காதல்...
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள நீ முற்பட்ட கணமே எனக்குப் புரிந்தது
என் மீதான உன் காதல். நான் வென்று விட நீ தோற்றக் கணம் ஆயிரம், தோற்றுப் போவதால் உனக்குஏற்படும் வலிக்கு நானும் என் காதலுமே மருந்து மறவாதே. உன்னைப் பற்றிய என் ஆயிரம் ஆயிரம் கற்பனை ஆழ் மனதில் வலிகளாக வலம் வந்தாலும் உன்னை விடவில்லையே என் காதல் மனது.
நிலவைப் பிடிக்க அழும் குழந்தையாய் மாறியது என் மனம். அத்தனையும் தாண்டித் தந்தாய் இறுதியாக உன் மனதை எனக்கே எனக்காக. அதற்காகத் தானே என் மனதை விதையிட்டு என் உயிரை உருக்கி ஊற்றி வளர்த்தேன் காதல் மரத்தை...
உயிரே உன்னைத் தவிர யார் புரிந்து கொள்வார் எனது குழந்தை மனதை?
உனக்கென வாழ்வதில் அத்தனை அத்தனை சந்தோசம் என் உயிருக்கும்..
உனக்கென துடிப்பதில் அத்தனை அத்தனை மகிழ்ச்சி இந்த இதயத்திற்கும்..
செல்லச் சண்டையிட்டு உன் பரிவை பெற நினைப்பேன் கலங்காதே..
என் ஒவ்வொரு செயலும் காட்டும் உன் மீதான என் காதல் பைத்தியத்தை..
எது எப்படியோ உன்னிடம் இருந்தால் தான் கழியும் என் பொழுதும், இரவும்..
உன்னிடம் பொய் சொல்லத் தெரியாது இந்த மனதிற்குச் சொன்னாலும் கண்டுபிடிக்கும் உன் மனது என் கண்களை பார்த்து அல்ல, என் குரலை கேட்டு..
எனக்கென பிறந்த உனக்குப் பிறந்த நாளாம் இன்று ஏன்? தினமும் நீ என்னில் பிறந்து
கொண்டேதான் இருக்கிறாய்.
உனக்கான என் பிறந்த நாள் பரிசு… நான் நம் குழந்தையை சுமந்து கொண்டேதான் இருக்கிறேன்..
-உன் செல்ல பப்பு.
உஷா கண்களில் திகைப்பும் சிரிப்பும் கலந்து கண்ணீர் வர. பத்திரமாய் தன்னிடம் வைத்திருந்த ஒரு பெட்டிக்குள் இருந்த ஒரு பாதி புகைப்படத்தை எடுத்து அதை என்னை நோக்கி நீட்டி கேட்டால்....
உஷா : இந்த போடோல இருக்குறது யாருங்க?
நான் : இது என் சின்ன வயசு போடோ இது எப்படி உங்கிட்ட!!!!!!!!!!!!..
உஷா : இது என்னோட போட்டோதான். நான் தான் உங்க பப்பு.” சொல்லியபடியே என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
பத்து வயதில் டிங்குவும் பப்புவும் சேர்ந்து எடுத்துக்கொண்டது. சரிபாதியாக வெட்டி டிங்கு இருப்பதை பப்புவும் பப்பு இருக்கும் படத்தை டிங்குவும் வைத்துக் கொண்டது.. இரண்டும் ஒரு சேர வைத்து வாய் விட்டுச் சிரித்து கொண்டாள். யாரை இத்தனை நாட்கள் பார்க்க தவித்தாளோ அவனே நான்.
நாட்கள் பல கடந்திருப்பினும், அந்தப் பாசம் எவரிடமும் அவள் உணரவில்லை..
உஷா கண்களில் திகைப்பும் சிரிப்பும் கலந்து கண்ணீர் வர. பத்திரமாய் தன்னிடம் வைத்திருந்த ஒரு பெட்டிக்குள் இருந்த ஒரு பாதி புகைப்படத்தை எடுத்து அதை என்னை நோக்கி நீட்டி கேட்டால்....
உஷா : இந்த போடோல இருக்குறது யாருங்க?
நான் : இது என் சின்ன வயசு போடோ இது எப்படி உங்கிட்ட!!!!!!!!!!!!..
உஷா : இது என்னோட போட்டோதான். நான் தான் உங்க பப்பு.” சொல்லியபடியே என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
பத்து வயதில் டிங்குவும் பப்புவும் சேர்ந்து எடுத்துக்கொண்டது. சரிபாதியாக வெட்டி டிங்கு இருப்பதை பப்புவும் பப்பு இருக்கும் படத்தை டிங்குவும் வைத்துக் கொண்டது.. இரண்டும் ஒரு சேர வைத்து வாய் விட்டுச் சிரித்து கொண்டாள். யாரை இத்தனை நாட்கள் பார்க்க தவித்தாளோ அவனே நான்.
அவள் நினைவலைகள் பின்னோக்கி இழுத்துச் சென்றன.. அந்தப் பிஞ்சு பருவத்தில், ஆண்டு விடுமுறை எதிர்பார்த்துக் காத்திருப்பாள் என்னைக் காண மட்டுமே.. ஆம், ஆண்டிற்கு ஒரு முறை அவள் வீட்டருகே இருந்த என் உறவினர்களைக் காண வருவேன்.. ஒரு வாரம் தான் இருப்பேன் ..மூன்றாண்டுகள் தான் இது தொடர்ந்தது, பின் அவள் எங்கோ நான் எங்கோ..
நாட்கள் பல கடந்திருப்பினும், அந்தப் பாசம் எவரிடமும் அவள் உணரவில்லை..
நீதி::::: சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் விடாது.. !
நான் அவளிடம் சொன்ன, முதல் வார்த்தை, பப்பு ?! அவர்கள் கல்யாண பத்திரிகை எடுத்து, பிரபு வெட்ஸ் உஷா என்று இருந்ததைத் திருத்தி, டிங்கு வெட்ஸ் பப்பு என மாற்றினாள்..
எப்.எம் வானொலியில் .. ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி ஒலிக்க
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்ட ஒரு அழகிய வாழ்க்கை இனிதாய் பூத்தது..
" குட்டையை கிளறிய புஸ்பா !!!! அடுத்த பகுதி தொடரும்.........
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] [70] [71] [72]
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"காதலைக் காதலிக்கும் காதலர்கள் மட்டுமே
காதலால் காதலிக்கப்படுகிறார்கள்"
கருத்துரையிடுக Facebook Disqus