0
Image result for family memes tamil

தவறான பாஸ்வேர்ட்டை போட்டால் உங்களுடைய மெயில் ஐடியைகூட எப்படி ஓபன்செய்ய முடியாதோ, அதுபோலவே தவறான சிந்தனைகளோடு வாழ்ந்தால், சொர்கத்தின் வாசலையும் உங்களால் திறக்கவே முடியாது...
--------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பகுதி  டிங்கு டைரி - 74 பப்புவின் காதல் கடிதம் !!!!

சிலவருடங்களுக்குப் பிறகு ஒருநாள் காலை வேலை...  டீபாய் மேல இரண்டு பிளேட் இட்லி அதுக்கு தொட்டுக தக்காளி சட்னி, நான் தொட்டு சாப்பிட முதல் இடலிலேயே தெருஞ்சுடுச்சு உப்பு அதிகம்னு (என்ன என்மேல காண்டுன்னு தெரியலையே இவ்ளோ உப்ப கொட்டியிருக்குரா)ஆனா இத நேரடியாக சொல்லமுடியாது மனைவியிடம் அதுக்கு தான் எல்லா வீட்டிலும் ஒரு இடை தரகர் இருப்பாங்க அதுதான் குழந்தைகள் என் பக்கத்தில் இருந்தான் செல்லகுட்டி ரகு (என் ரகு மாமா பேரேதான் அவர்நாலதான் நாங்க மறுபடியும் காதலர்களாக சேந்தோம்) 

நான் : ரகு சட்னி சுப்பரா இருக்கு

ரகு : அப்பா ஒரே உப்பா இருக்குது ....... ஓய்...

உஷா : ரகு வேணுன்னு தான் நான் உப்ப அள்ளிப் போட்டேன்

நான் : அப்படி ஒன்னும் தெரியலையே

உஷா : அது எல்லாம் சொரணை இருகுரவங்களுக்கு தான் தெரியும்

அசிங்கபடுத்துறாலே

நான் : ரகு உங்க அம்மா எப்ப எல்லாம் சந்தோசம இருகுராலோ அப்பா எல்லாம் வஞ்சரமீன் வாங்கிட்டு வந்து வைப்பா பாரு செம டேஸ்ட். இது வரைக்கும் மூணு தடவதான்டா வசிருக்குரா தெரியுமா

உஷா : ரகு அப்போ பாத்துக்கடா இந்த அஞ்சு வருசத்துல நா மூனுதடவதான் ஹப்பியா இருந்திருக்கிறேன்

நான் : ரகு இது எல்லாம் ரொம்ப ஓவர்

உஷா : ரகு உன்மைய சொன்ன கோவம் வரத்தான் செய்யும்

நான் : ரகு என் மேல எந்தத் தப்பும் இல்ல

உஷா : ரகு பொண்டாட்டி பத்தி நினைப்போ அக்கறையோ இல்லாதவனாகப் பத்தி எனக்குக் கவலை இல்லை

நான் : ரகு

உஷா : ரகு

நான் : ரகு

ரகு : போதும் நிருந்துங்க ஐயோ ஐயோ இவங்க தொல்ல தாங்க முடியல

ரகு அவன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்

சரி ஆப்பிஸ் கிளம்பலாம் .. சூவை மாட்டிக்கொண்டு முன் கதவை தாண்டினேன்.. சோபாவில் என்னையே பார்த்த்ககொண்டிருந்த உஷா எழுந்து முன்கதவை பார்த்தவாறு வர.... சிறிது வினாடியில் என் தலையை மட்டும் ஹாலுக்குள் இருந்த உஷாவை பார்த்து சைகையில் ஒரு பாய் சொன்னேன் என்னைப் பார்த்த உஷா சிறிது முறைத்தவாறு தன் வாயை கோநித்துக்கொண்டு சமையலறை சென்றால்..

பொதுவாகவே இந்த பக்கத்து வீட்டு பொண்ணுகளுக்கு அடுத்த வீட்டு பொண்ணுக சந்தோசமா இருக்குறது பிடிக்காது.. ஏதாவது சொல்லி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திடுவாங்க, அப்படி ஒரு பொண்ணு தான் புளுகமூஞ்சி புஸ்பா.

புஸ்பா : உஷா.. உஷா

உஷா : வாடி என்ன சமையல் எல்லாம் ஆச்சா

புஸ்பா : முடுஞ்சுருச்சுடி

உஷா : இன்னிக்கு என்ன ஸ்பெசல்

புஸ்பா : அதெல்லாம் விடு, அப்றோம் என்ன ஆச்சு உன் வீட்டுக்காரர் கூட பேசாம இருந்தையே.. சால்வு ஆய்டுச்சா

உஷா : இல்ல டி இப்ப எல்லாம் கொஞ்ச நாலா அடிக்கடி குடிக்க அரம்பெசுடார் அதனால நான் பேசறதே இல்ல

புஸ்பா : ஏன் உங்களுக்குள எதாவது பிரச்சனையா

உஷா : அது எல்லாம் இல்லடி அவர் ஆபிஸ்ல பெரிய ஒரு ப்ரொஜெச்ட் ஒன்னு முடுசாங்கலாம அதுனால அவர் பிரண்ட்ஸ் எல்லாம் சேந்து அடிக்கடி பார்டி வைக்குராங்கலாமா

புஸ்பா : என்னடி இவ்ளோ அசால்ட சொல்லுற இத இப்படியே தொடர விடாத உனக்கு இது நல்லதே இல்ல

உஷா : என்னடி இப்படி சொல்லுற

புஸ்பா : ஏன்னா என் பிரென்ட் வீட்டுகாரர் இப்படித்தான் திடிர்னு அடிக்கடி குடிக்க ஆரம்பித்தார் அத்தோட வீட்டு நினைப்பே இல்லாம போய்டுச்சு

உஷா : ஆமாடி இவரும் முன்ன மாதிரி இல்ல வீட்டுக்கும் அதிகமா வரமாடிங்குராறு என்கிட்டையும் எதுவும் சொல்லுரதுமில்ல.

புஸ்பா : பாத்தியாடி அதுமட்டும் இல்ல உஷா அவனுக்கு இன்னொரு பொண்ணுகூட பழக்கம் ஏற்பட்டு பெரிய பிரச்சனை ஆச்சு . பாவம் இப்போ என் பிரென்ட் வாழ்கை தான் கேள்விக்குறியா இருக்கு

உஷா : ஐ ஐ ஓ என்னடி சொல்லுற

புஸ்பா : அம்மாடி அதுக்கு தான் இப்பவே உன் வீட்டுகாரர கண்டுச்சுவைனு சொல்லுறேன்

உஷா : ச்சே ச்சே இல்லடி என்னதா குட்டுச்சாலும் என் வீட்டுக்காரர் அப்படியெல்லாம் போக மாட்டார்

புஸ்பா : உஷா மனுசனோட குணம் எப்போ எப்படி வேணுனாலும் மாறலாம் என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும் சரிடி நான் வரேன் பாத்துக்கோ

உஷா : ம்ம்... குழப்பத்தில் ஆழ்ந்தாள்

அப்பாடா உஷா யோசிக்க ஆரம்பெச்சுட்டா, நம்ம வந்த வேல முடுஞ்சுது. இந்த ரகு பையன எங்க காணோம்  கொஞ்சம் அவனையும் கேளரலாம்.. ரகு குட்டி எங்க இருக்குற.. ஆண்டி உனக்கு ஒன்னு கொண்டுவந்திருக்குறேன்..

புஸ்பா : என்ன பண்ற?

ரகு : படிக்கிறேன் ஆண்டி

புஸ்பா : படிச்சு என்னாவா ஆகப்போற ?

ரகு : அதைப் பத்திதான் யோசிச்சிட்டு இருக்கிறேன்

புஸ்பா : என்னன்னு ?

ரகு : படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு

புஸ்பா : குழப்பமா இருக்கா ஏன் ?

ரகு : ஒரு வாத்தியாரின் பத்துவருச சம்பளம் 20 லட்சமாம்

புஸ்பா : அப்ப வாத்தியாருக்கு படி

ரகு : ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சமாம்

புஸ்பா : அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி

ரகு : டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சமாம்

புஸ்பா : அடேங்கப்பா அப்ப டாக்டருக்கு படி

ரகு : ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சமாம்

புஸ்பா : பார்ரா ... நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு

ரகு : எதுவுமே படிக்காத ஒரு அரசியல்வாதியின் பத்து வருட வருமானம் 1117 கோடியிலேர்ந்து 40000கோடி வரைகும் போகுதாம்

புஸ்பா :.....!!! ஆஹா.. நம்ம இவன குழப்புலாம்னு பாத்தா இவன் நம்மள அதிகமா குழப்புரானே.

ரகு : நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு..

புஸ்பா : இவங்கிட்ட பேசி ஜெய்க்க முடியாது.. நம்மாலே எடத்த காலி பண்ணிடனும். 

அன்று மாலை உஷா ராகுலுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்டுக் கொண்டிருந்தால்

காலிங் பெல் சத்தம் கேட்டு புத்தகத்தை ராகுலிடம் கொடுத்து படிடானு சொல்லிட்டு கதவைத் திறக்க வந்தால்.

நான் : ஏய் இரு இரு மெதுவா தொற கீழ விலுந்திடபோறேன் .. சிரித்துக் கொண்டே உஷாவை பார்த்து நீ தானா ஹாய் செல்லம்

உஷா : குடுச்சிட்டு வந்திருக்கிரியா????? 

" உஷா வைத்து சென்ற கடிதம்   !!!! அடுத்த பகுதி தொடரும்.........     
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Image result for love memes tamil
மண் விளக்கிலிருந்து தீபம் எரிகிறதா இல்லை குத்துவிளக்கிலிருந்து தீபம் எரிகிறதா என்பதில் இல்லை வித்தியாசம், எது வெளிச்சம் அதிகமாகவும், நீண்டநேரமும் தருகிறது என்பதில் அடங்கி இருக்கிறது வித்தியாசம்...

கருத்துரையிடுக Disqus

 
Top