0

"மாயவன் வருகைக்காக மயங்கும் மாதவி அறியாள் அவள் எங்கேயோ அவனும் அங்கேயே .. 💕💞"
--------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பகுதி  டிங்கு டைரி - 76 உஷா வைத்து சென்ற கடிதம் !!!!

மாதங்கள் ஓடின நாட்கள் செல்ல செல்ல என் மாற்றங்களைக் கொஞ்சம் கவனித்தால் உஷா. இவர் இப்படியிருக்க மாட்டாரே... ஏதோ மிஸ்ஸாகுதே என மனதில் நினைத்தபடியே எனக்கு காஃபி கொண்டுவந்தாள்.

ரகு : நேத்து நீ வரைஞ்சத தப்புனு மிஸ் சொல்லிட்டாங்கபா..

நான் : ஏனாம்.... சரியாத்தான இருக்கு..

ரகு : அதான் தப்பு. நான் வரைஞ்ச மாதிரி வரைச்சிருக்கனும்.. நீ அப்படியே கம்பியுட்டர்ல பெயிண்ட் பண்ணுன மாதிரி வீடு வரைஞ்சு கொடுத்தா... மிஸ் கண்டுபிடிக்க மாட்டாங்களா.  இன்னைக்கு நாலு காய்கறி வரைஞ்சு கொடு... ஆனால் நான் வரைஞ்சா மாதிரி வரைஞ்சு கொடு...ஒகே... என நானும் என்  மகன் ரகுவும் பேசிக்கொண்டே ஹோம் ஒர்க் செய்தோம்.

உஷா : ஏய் ரகு.. வரவர நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்யரதே இல்லை.. எல்லாத்தையும் அப்பா தலையில கட்டிறே..

நான் : சும்மா உளறாதே... தேர்ட் ஸ்டாண்டர்டு படிக்கிற புள்ளைக்கு டிராயிங் வருமா வராதானு தெரியாம... வீடு வரஞ்சி எடுத்துட்டுவா.. மயில் வர... மயிர் வரனு சொன்னா... வேற யாராச்சும் தான் வரைஞ்சுதருவாங்க.. அதுக லெவலுக்கு சொல்லித்தரணும்..

உஷா : கொஞ்சம் நீங்க கம்முனு இருகிறீங்களா. ஏற்கனவே உங்க பையன்  வாய் கோயமுத்தூர் வரைக்கும் போகுது.. இதுல நீங்க வேற இப்படி சொல்லிக்கொடுங்க ... இன்னும் கிழியும்.. எந்திருச்சி போய் காஃபிய குடிங்க என விரட்டினாள்.

சம் போட்டுட்டியா.. எங்க காட்டு என உஷா செக் செய்ய... நான் மெதுவாய் அறையைவிட்டு எழுந்து ஹால் வந்தேன். ஏதோ ஒரு புக்கை எடுத்து புரட்டதொடங்கினேன் காஃபியின் துணையோடு.

உஷா : என்னங்க எங்கயாச்சும் போவோமா.. என என்னை நெருக்கி அமர்ந்தபடி சொன்னாள். 

நான் : சொல்லு சண்டே போலாம்.. எங்க ...?

உஷா : சண்டே வேண்டாம்... அது யூஸ்வலா போறதுதானே... நாளைக்குப் போவோம்..

நான் : நாளைக்கா ? என்ன விசேஷம்... ?

உஷா : விசேஷசம்னாதான் கூப்புட்டுபோவீ ங்கலா .. நீங்க உங்க வேலையவே பாருங்க  என உள்ளே எழுந்து சென்றாள் 

இப்ப என்ன கிறுக்கு புடுச்சுதுன்னு தெரியலையே என அவள் பின் தொடர்ந்தேன் ...

நான் : சொல்லுடா செல்லம் என்ன பிரச்சினை..

உஷா : ஒன்னுமில்லை மனசு ஒருமாதிரி இருக்கு...

நான் : சொல்லு அது என்ன பிரச்சினை...

உஷா : ஒரு பிரச்சினையும் இல்லை.. நீங்க போய் வேலைய பாருங்க ...

நான் : சரி ஒகே. சாரி. நாளைக்கு ரகுவ ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியா இரு. நா ஆபீஸ் போய்ட்டு என் டீமுக்கு வேலைய சொல்லிட்டு வந்துடுறேன்.... ஒகே

உஷா : ஒன்னும் வேணாம்...

நான் : நோ நோ.. இது டிங்கு ஆர்டர். ரகுக்கு மட்டும் மதியம் செய். நாம வெளியே பாத்துக்கலாம்... 

என சொல்லிவிட்டு மீண்டும் ஹாலுக்கே சென்ரேன் . உஷாக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. நாளை கண்டிப்பாக கேட்கவேண்டும். இந்த ஒரு மாதம் இவர்  ரொம்ப மாறியிருக்கிறார். முன்னாடி எல்லாம் வேலைவேலைனு உயிர விடுவார். இப்ப டானு 7 மணிக்கு வீட்டுக்கு வந்துடுறானர். ஞாயிற்றுக்கிழமை... விளையாடப் போனாலும் 12மணிக்கு வீட்டுகு வந்துடுறார்... எல்லா ஞாயிறும் அவுட்டிங் கூப்டு போறார்.. ஆனா வேலை முன்னாடிக்கு இப்ப நிறைய ப்ராஜெக்ட் தான் எடுத்துருக்கார்... எல்லா கேட்கணும்... வீட்ல கேட்டா குதிப்பார்... என அவள் மனதுக்குள் நாளைக்கான தயாரித்தல் நடந்துகொண்டிருந்தது.

Related image

உஷா : இது என்ன ஹோட்டல்ங்க பொம்மையெல்லாம் சாப்பாடு கொண்டுவருது.... செமயா இருக்கு...... சென்னையிலையா இப்படி ஒன்னு என ஆச்சரியமாய் கேட்டாள். 

நான் : சிரித்தபடி.. அந்த மெனுகார்டில் பார்த்து ஏதோ ஒன்றைச் சொன்னேன். வாஷிங் பவுல் வந்தன. கூடவே மடியில் மூடும் டவல் வந்தது. சரி.. சொல்லு என்ன பிரச்சினை என உஷாவை பார்த்துக் கேட்டேன்.

உஷா : நீங்க தான் சொல்லனும்

நான் : நான் என்ன சொல்ல...

உஷா : ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறீங்க... அடிக்கடி அவுட்டிங்...

நான் : ஒன்னுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்

உஷா : ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா.. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா.

நான் சிரித்தேன். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னேன்..

நான் : நீயா கேட்பே சொல்லனும்னுதான் இருந்தேன். என கொஞ்சம் சீரியஸ் ஆனேன்.

உஷா : என்னங்க  ஏதும் பிரச்சினையா...

நான் : இல்லையெனத் தலையாட்டியபடியே எனது அலுவலக பையை திறந்தேன். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினேன்.

உஷா : என்ன இது ..

" அம்மாவின் கடிதம்  !!!! அடுத்த பகுதி தொடரும்.........

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இருகப் பற்றி இருக்கும் வரை தான் "விடு" எனச் சொல்லும் வீராப்பெல்லாம் சற்றே தளர்வது போல் தோன்றினும் குரலில் கோபம் குறைத்தும் கொஞ்சமாய் கெஞ்சுதல் கூட்டியுமென பிடி இறுக்க வைக்கும் பிடிவாதங்கள் அவளது

கருத்துரையிடுக Disqus

 
Top