விடியா மேகம், வேகம் உள்ள தேகம், சூரியனோ பாவம்
ஆதம விதிகள் இல்லை சாதகம் செய்வதர்கே
சாதனை செய்தபின் வெளிச்சமோ
விடிந்த பின்னும் மேகமே
----------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 77 நல்லவனா இருந்தாலும் தப்புதான் !!!!நான் உஷாவை அந்த கடிதத்தை படி எனச் சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தேன். அவள் படிக்க தொடங்கினாள்
அன்புள்ள மகனுக்கு,
கண்டிப்பா என்னைக்காச்சும் இந்தக் கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்து படிக்காதா.
உங்கப்பாவ கல்யாணம் பண்னும்போது நான் கல்லூரி லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.. வேலையை விட்டுவிட்டு வீட்டோடு உன்ன கவனிச்சுட்டு இருந்தேன். உனக்குத் தான் தெரியுமே அப்பா எப்படி பிசினு...
கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர் அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீ தான் எனக்குத்துணை. நாம தான் விளையாடுவோம். அப்புறம் நீ ஸ்கூலுக்கு போய்ட.. நீ வரதுக்கு காத்திட்டுருபேன்.
ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவ.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லாம் உன் கற்பனைனு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீ வளர்ந்த.. பள்ளி விடுதியில் உங்க அப்பா உன்னச் சேர்க்க நான் தனிமரமானேன்.. அம்மாட்ட சொல்ல உனக்கு ஏதுமில்லாம போச்சு. ஆனா உன்கிட்டையும் உங்க அப்பகிட்டையும் இருந்து ஆர்டர் மட்டும்வந்துச்சு. இப்ப வெளியே போகனும்... இப்படி வெளியே போகணும்னு.. ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......
காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....நீ எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு.. பிசி இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுங்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?
உனக்குச் சொல்லவே வேண்டாம்... நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்... சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.
உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசிக் காலத்தில் ஏதுவும் இல்லாமல் இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... எண்ட பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு. ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேசவிஷயமில்லை...
அனுபவமும் இல்லை இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள் பார்ப்பேன்.. அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் தான்.
உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளைப் பார்ப்பேன்... அதுல இன்னைகே வாழ்ந்துடனும்... அடுத்த ஆறு நாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன். இன்னைக்கு ஒரு நாள் தானேனு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள் பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்குக் காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...
உங்களுக்கு ஒரு நாள் தானேனு ஒரு நினைப்புவந்துடுச்சு. இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்கியா... என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல அதான் உண்கிட்ட சொல்றே.. நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்கு வீட்ல ஒரு பையன் இருக்கான், மனைவி இருக்கா... காத்திட்டு இருக்காங்க...
நீ உன் பையன்னுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துடாதா? உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடதா... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிகோ.. சீக்கிரம் வீட்டுக்கு வா. பொண்டாடிகிட்ட புள்ளைககிட்ட பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும் ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா ?
செய்வேனு நம்புறேன். ஏன்னா எண்ட நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகன விட்டுடவா போற...
கடிதத்தைப் படித்து முடிந்தாள் உஷா. அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.... இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....
உஷா : நான் தான்மா
.....
உஷா : ஏன் சும்மா பேசக்கூடாதா
...
உஷா : என்ன செய்ற...
....
உஷா: அப்பா என்ன செய்றாரு... எனப் பேசத்தொடங்கினாள்.
ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உறுக தொடங்கியது.... . நான் சிரித்தபடி சாப்பிடத் தொடங்கினேன். இனிமே அப்படித்தான்.. இனி அங்கே அன்பில் காத்திருக்க அவசியமில்லை.
மறுநாள் வேலை முடிந்து நான் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...
உஷா : "வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்"!.
" SAY SOMETHING !!!! அடுத்த பகுதி தொடரும்.........
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] [70] [71] [72] [73] [74] [75] [76]
[77] முந்தைய பதிவு || அடுத்த பதிவு [79]
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உன் கண்கள் எதையே
சொல்லி விட துடிக்கிறது
ஒன்றும் தெரியாதது போல்
நடிக்கிறது உன் உதடு
கருத்துரையிடுக Facebook Disqus